நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வெறும் வயிற்றில் காபியுடன் இந்த 3 பொருட்களை சேர்த்து குடித்தால் உடல் எடை குறையுமாம்!

நாளொன்றுக்கு மூன்று கப் காபி அருந்துவது நீங்கள் நீண்ட காலம் வாழ உதவலாம் என்று 10 ஐரோப்பிய நாடுகளில் ஏறத்தாழ அரை மில்லியன் மக்களிடையே நடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது.

காலையில் எழுந்ததும் காபி குடிக்க நிறைய பேருக்கு ரொம்ப பிடிக்கும். அப்படி காபி குடித்தால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். ஆனால் உடல் எடையைக் குறைக்க நினைப்போர் இப்படி காபி குடித்தால் உடல் எடை குறையுமாம்.

அதுவும் அந்த காபியுடன் ஒரு 3 பொருட்களைக் கலந்து குடித்தால், ஒரே மாதத்தில் 10 கிலோ வரை உடல் எடையைக் குறைக்க முடியுமாம். ஆச்சரியமாக இருக்கிறதா...
காபியுடன் எந்த பொருட்களை சேர்த்து குடித்தால் உடல் எடை குறையும் என்பதைப் பற்றி பார்ப்போம் -

பட்டை

பட்டையில் மருத்துவ குணங்கள் ஏராளமாக உள்ளது. பட்டையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி பொருட்கள் அதிகம் உள்ளது. இது உடலினுள் உள்ள நோய்த்தொற்றுகள் மற்றும் அழற்சிகளை எதிர்த்துப் போராடும். மேலும் இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, சர்க்கரையை உடைத்து ஆற்றலாக மாற்றும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் நல்ல கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. இது இயற்கையாக உடலில் உள்ள வெப்பத்தை அதிகரித்து, உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புக்களைக் கரைக்கிறது.

தேன்

தேனில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களான இரும்புச்சத்து, பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், ஜிங்க் மற்றும் கால்சியம் உள்ளது. இவை அனைத்தும் கொழுப்புக்களை கரைக்கத் தேவையானவை.

தயாரிக்கும் முறை

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களை எடுத்துக் கொண்டு ஒரு மிக்ஸி ஜாரில் நன்கு அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்து விட வேண்டும்.

பயன்படுத்தும் முறை

தினமும் காலையில் காபி குடிக்கும் போது, சூடான காபியுடன் இந்த கலவையை 1 டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர வேண்டும். காபியின் சுவை வித்தியாசமாக இருப்பதோடு இல்லாமல், உடல் எடையும் குறைய ஆரம்பித்து விடும். 


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்