நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அழுவது ஆரோக்கியமே!

எதிர்பாராத துயர சம்பவங்கள் நிகழும்போதோ, மனதை காயப்படுத்தும் நிகழ்வுகளை எதிர்கொள்ளும்போதோ அழுகை பீறிட்டு வெளிப்படும். சோகம், பயம், மனக்கவலை காரணமாகவும் சிலருக்கு கண்ணீர் வெளியேறும்.
அந்த சமயங்களில் அழுவது ஒருவகையில் ஆரோக்கியமானதும் கூட. அழும்போது மன அழுத்தத்திற்கு வித்திடும் ஹார்மோன்களின் அளவு குறையக்கூடும். அதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கு வழிவகை ஏற்படும். உடலில் உள்ள தேவையற்ற ரசாயனங்களின் தன்மையும் குறையக்கூடும்.

அழுவது கண்களுக்கும் நன்மை சேர்க்கும். அழுவதன் மூலம் கண் வறட்சி, கண்கள் சிவத்தல், கண் எரிச்சல் போன்ற பிரச்சினைகளை கட்டுப்படுத்தலாம். அழும்போது கண்ணீர் வெளிப்படுவது ஆக்ஸிடாஸின் மற்றும் எண்டோர்பின்களை வெளியிட உதவுவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இவை வெளியேறுவது மனநிலையை மேம்படுத்த உதவும். உணர்வு ரீதியாக தூண்டப்படும் கண்ணீரில் லைசோசம் எனப்படும் நொதி வெளிப்படும். அது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டது. அதனால் அழுவது பாக்டீரியாக்களை கொல்லவும், கண்களை சுத்தமாக வைத்திருக்கவும் உதவும்.

குழந்தைகள் அழுவது நன்றாக தூங்குவதற்கு வழிவகுக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அழுவது குழந்தையின் மன நிலையை அதிகரிக்க உதவும். உடல் வலியையும் குறைக்கும். அதனால் நன்றாக தூங்குவார்கள். அழுவது 
குழந்தைகளின் தூக்க நிலையை மேம்படுத்தும் என்பதை ஆய்வுகளும் உறுதிபடுத்தியுள்ளன. கண்களை சுத்தப்படுத்துவதற்கு அழுகை ஒன்றுதான் சிறப்பானது. அதனால் அழுவது உடலுக்கு நல்லது.

Also read : 

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!