நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தாய்மார்களுக்கு பீதிவேண்டாம் - தாய்ப்பால் மூலம் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்படாது

கொரோனாவின் பிறப்பிடமான சீனாவின் வூகான் மற்றும் அமெரிக்காவிலும் இது போன்ற சோதனைகள் நடத்தப்பட்டு தாய்ப்பால் மூலம் கொரோனா தொற்று பரவாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

கொரோனா தொற்று மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. அந்த வகையில் பாலூட்டும் தாய்மார்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டால் குழந்தைகளுக்கும் தொற்று ஏற்படுமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் அதற்கான சாத்தியம் இல்லை என்று உலக அளவில் பல்வேறு தரப்புகள் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் புதுவை ஜிப்மர் பேராசிரியர் டாக்டர் ஆதிசிவம் தலைமையிலான மருத்துவ குழுவினர் இதுபற்றி விரிவான ஆய்வு நடத்தி இருக்கிறார்கள். கொரோனா தொற்று ஏற்பட்ட கர்ப்பிணிகள் பிரசவித்த 48 முதல் 72 மணி நேர இடைவெளியில் அவர்களின் தாய்ப்பால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆர்.டி. பி.சி.ஆர். பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் அவர்களுக்கு தொற்று இருந்தது உறுதியானது.

அதை தொடர்ந்து மிகவும் பாதுகாப்பான முறையில் முககவசம் அணிந்தும், கிருமி நாசினியால் கைளை சுத்தப்படுத்திக்கொண்டும், அந்த பகுதியையே தொற்று ஏற்படாதபடி பராமரித்தும் குழந்தைகளுக்கு பாலூட்ட செய்தனர்.

பின்னர் ஒன்றிரண்டு நாட்களுக்கு பிறகும், 5 நாட்களுக்கு பிறகும் அந்த குழந்தைகளின் சளிமாதிரிகளை எடுத்து பரிசோதித்தனர். அப்போது அனைத்து குழந்தைகளுக்கும் தொற்று ஏற்படவில்லை. என்பது உறுதி செய்யப்பட்டது.

எனவே கொரோனா தொற்று ஏற்பட்ட தாய்மார்கள் பாலூட்டுவதால் அதன் மூலம் தொற்று பரவ வாய்ப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவின் பிறப்பிடமான சீனாவின் வூகான் மற்றும் அமெரிக்காவிலும் இது போன்ற சோதனைகள் நடத்தப்பட்டு தாய்ப்பால் மூலம் கொரோனா தொற்று பரவாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாறாக தொற்று பாதித்த பெண்கள் பாலூட்டுவதால் குழந்தைகளின் உடலில் ஆன்டிபாடி என்ற நோய் எதிர்ப்பாற்றல் அதிகரித்து கொரோனா தொற்றில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது தெரிய வந்துள்ளது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்