நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ரீல்ஸ் அம்சத்தில் புதிதாக விளம்பரங்களை அறிமுகப்படுத்திய இன்ஸ்டாகிராம்!

 இன்ஸ்டா ரீல்ஸ் பகுதியில் உங்களை ஃபாலோ செய்யாதவர்களையும் விளம்பரம் மூலம் சென்றடைய முடியும்.


இன்ஸ்டாகிராம் தனது ‘ரீல்ஸ்’ அம்சத்திற்கு விளம்பரங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. டிக்டாக் போட்டியாளரான இன்ஸ்டாகிராமின் ரீல்ஸ் உலகளவில் விளம்பரங்களை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. டிக்டாக்குடன் போட்டியிடுவதற்காக 2020-ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட இன்ஸ்டாவின் ரீல்ஸ் குறுகிய காலத்தில் யூஸர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. ஈர்க்கக்கூடிய குறுகிய வீடியோக்களால் நிரம்பி வழிகிறது ரீல்ஸ்.


இன்ஸ்டாகிராமின் பேரண்ட் நிறுவனமான பேஸ்புக் இப்போது யூஸர்கள் பலவிதமான பிராண்டுகளிலிருந்து விளம்பரப்படுத்தப்பட்ட போஸ்ட்களை ரீல்ஸில் பார்க்க துவங்குவதாக கூறுகிறது. இதில் பின்பற்ற பரிந்துரைக்கப்பட்ட படைப்பாளர்களிடமிருந்து விளம்பரப்படுத்தப்பட்ட வீடியோக்களும் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.


முன்னதாக இதை சோதனை முயற்சியாக துவக்கி தேர்வு செய்யப்பட்ட சில நாடுகளில் மட்டும் நடைபெற்று வருவதாக கூறி இருந்த நிலையில், தற்போது ரீல்ஸில் உலகளவில் விளம்பரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.

இன்ஸ்டா ரீல்ஸ் பகுதியில் உங்களை ஃபாலோ செய்யாதவர்களையும் விளம்பரம் மூலம் சென்றடைய முடியும் என்று கூறப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள வணிகர்கள் மற்றும் விளம்பரதாரர்களுக்கென்று அறிமுகப்படுத்தி உள்ள இந்த புதிய அம்சம் பற்றி பேசியுள்ள இன்ஸ்டாகிராமின் தலைமை இயக்க அதிகாரி ஜஸ்டின் ஓசோஃப்ஸ்கி ,இன்ஸ்டாகிராமில் புதிய உள்ளடக்கத்தைக் கண்டறிய, மக்களுக்கு ஒரு சிறந்த வழியாக ரீல்ஸ் இருப்பதை பார்க்கிறோம். எனவே விளம்பரங்கள் இயல்பான ஒரு பொருத்தமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ரீல்ஸ்கள் மக்கள் ஏற்கனவே மகிழ்விக்கும் சூழலில் இந்த புதிய படைப்பு வடிவமைப்பை அனைத்து அளவிலான பிராண்டுகளும் பயன்படுத்திக் கொள்ளலாம். விளம்பரங்கள் ஆர்கானிக் ரீல்களைப் போலவே இருக்கும். இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் காணப்படும் விளம்பரங்களைப் போலவே, ரீல்ஸில் காணப்படும் விளம்பரங்கள் 30 வினாடி நீளத்திலும், செங்குத்து வடிவத்திலும் இருக்கும். அவற்றை ‘ஸ்பான்சர்’ என்று குறிக்கும் ஒரு சிறிய லேபிள் மூலையில் தோன்றும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிற ரீல்ஸ் வீடியோக்களைப் போலவே விளம்பரங்களை தாங்கி வரும் ரீல்ஸ்களை மக்கள் லைக் செய்யவும், கருத்துத் தெரிவிக்கவும் மற்றும் சேவ் செய்து கொள்ளவும் முடியும். இந்தியா, பிரேசில், ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் இந்த நிறுவனம் முன்பு ரீல்ஸ் விளம்பரங்களை சோதித்த நிலையில் பின் கனடா, பிரான்ஸ், யு.கே மற்றும் அமெரிக்காவிற்கு விரிவுபடுத்தப்பட்டது. உங்களை ஃபாலோ செய்யாத மக்களையும் சென்றடைய இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் விளம்பரங்கள் உங்களுக்கு உதவும்.

வளர்ந்து வரும் ரீல்ஸில் வரும் விளம்பரங்கள் வணிகர்களின் பொருட்கள் தொடர்பான வீடியோக்களுக்கு அதிக வியூஸை பெற்று தரும் மேலும் பலர் தயாரிப்புகளை வாங்கும் ஆர்வத்தை ரீல்ஸ் விளம்பரங்கள் ஏற்படுத்தும். பிராண்டுகள் மற்றும் படைப்பாளர்களிடமிருந்து ஊக்கமளிக்கும் புதிய உள்ளடக்கத்தைக் கண்டறிய மக்களை அனுமதிக்கும் என்று இன்ஸ்டா கூறியுள்ளது.

பி.எம்.டபிள்யூ, நெஸ்லே (நெஸ்பிரெசோ), லூயிஸ் உய்ட்டன், நெட்ஃபிக்ஸ், உபர் மற்றும் பிற பிராண்டுகள் ரீல்ஸின் புதிய விளம்பர அம்சத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. ரீல்ஸ் டேப், ரீல்ஸ் இன் ஸ்டோரிஸ், ரீல்ஸ் இன் எக்ஸ்ப்ளோரர் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் விளம்பரங்கள் தோன்றும் என்று இன்ஸ்டாகிராம் கூறுகிறது,

மேலும் யூஸர்கள் போஸ்ட் செய்யும் தனிப்பட்ட ரீல்களுக்கு இடையிலும் விளம்பரங்கள் தோன்றும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ரீல்ஸ் விளம்பரங்களின் கட்டுப்பாடுகளை மக்களின் கையில் வழங்குகிறோம் என்று குறிப்பிட்டுள்ள இன்ஸ்டா, தங்களுக்கு விருப்பம் இல்லாத விளம்பரங்களை பார்த்தால் அதை தவிர்க்கவும், அல்லது மறைக்கவும் இயலும்.

ஒரு யூஸர் ஒரு ரீல்ஸ் விளம்பரத்தை எத்தனை முறை பார்க்கக்கூடும் என்று நிறுவனம் சொல்ல முடியாது, பார்வையாளர் சந்திக்கும் விளம்பரங்களின் எண்ணிக்கை அவர்கள் இன்ஸ்டாகிராமை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்து மாறுபடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


also read : 

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!