நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மக்கள்தொகை கணக்கெடுப்பு வந்தது எப்படி?

யுத்தம் நடந்தால் எத்தனை பேரை அனுப்பலாம் என்பதை அறிந்து கொள்வதற்காக இந்த கணக்கெடுப்பை நடத்தினார்கள்.
உலக நாடுகள் அனைத்திலும் வாழும் மக்களை கணக்கிடுவது ஒரு பொதுவான வழக்கம். இதை மக்கள்தொகை கணக்கெடுப்பு என்று கூறுகிறார்கள். இந்த முறை எங்கு, எப்போது தொடங்கியது என்பதை தெளிவாக கூறமுடியாது. மக்கள் பெரிய சமூகமாக எப்போது கூடி வாழ தொடங்கினார்களோ, அப்போதிருந்தே மனிதர்களின் எண்ணிக்கையை கணக்கில் வைத்துக்கொள்ளும் முறையும் வழக்கத்தில் வந்தது.

பழங்காலத்தில் மனிதர்களை கணக்கெடுத்தது பேருக்காகத் தான். யுத்தம் நடந்தால் எத்தனை பேரை அனுப்பலாம் என்பதை அறிந்து கொள்வதற்காக இந்த கணக்கெடுப்பை நடத்தினார்கள். மேலும் இந்த கணக்கீடு ஒருவருக்கு இவ்வளவு வரி விதித்தால் அரசுக்கு எவ்வளவு வருமானம் வரும் என்பதை அறிவதற்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு மிகவும் அவசியமாகிறது. முற்காலத்தில் இந்த 2 காரணங்களுக்காகவே மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இன்று மக்கள்தொகை கணக்கெடுப்பு பலவிதங்களில் முக்கியத்துவம் பெறுகிறது. இதனால் பலதரப்பட்ட மக்கள் பல்வேறு தொழில்கள் செய்வோரைப் பற்றியும் சரியான புள்ளிவிவரம் அரசுக்கு தெரியவருகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் பிற திட்டங்களை தீட்டவும் அவற்றை நடைமுறைக்கு கொண்டு வரவும் சாத்தியமாகிறது. இதன் மூலம் மக்கள் தொகை பெருகுகிறதா அல்லது குறைகிறதா என்பதும் தெரிய வருகிறது. இதற்கு ஏற்ப வருங்காலத்தில் மக்களது தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் திட்டங்கௌ சீரமைக்கவும் உதவியாக இருக்கிறது. இதனால் நகரங்களிலும் கிராமங் களிலும் வாழும் மக்களது விகிதத்தை அறிந்து கொள்ள லாம். மக்கள் தொகை அடிப் படையில்தான் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணி க்கை நிர்ணயிக்கப் படுகிறது. சட்டம் -ஒழுங்கு மற்றும் சமூக பொருளாதார சீர்த்திருத்தங்களுக்கும் இந்த கணக்கெடுப்பு வழிகாட்டுகிறது. இந்தியாவில் 1972-ல் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அன்றில் இருந்து 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!