நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

டிசம்பரில் ககன்யான் விண்வெளி பயணம்

பலவித தடைகளை கடந்து, ஆளில்லா 'ககன்யான்' விண்கலம் இந்தாண்டு டிசம்பரில் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ககன்யான் திட்டத்தின் கீழ் மனிதர்களை விண்வெளி ஆய்வுக்கு அனுப்ப, இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. சுதந்திர தின விழா இது குறித்து, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த 2018 சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி பேசியபோது, 75வது சுதந்திர தின விழாவுக்கு முன், இந்தியா மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் என்றார்.இதையடுத்து, ககன்யான் இஸ்ரோ திட்டத்தை வடிவமைத்தது. 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு, விண்கலத்திற்கான பாகங்களை தயாரிக்கும் பணி ஒப்படைக்கப் பட்டது.

அதன் அடிப்படையில், 2021 டிச., மற்றும் 2022 ஏப்ரலில் இரு ஆளில்லா விண்கலங்களை அனுப்ப திட்டமிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மனிதர்களை அனுப்ப முடிவு செய்து, நான்கு வீரர்களுக்கு ரஷ்யாவில் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், விண்கலம் தயாரிப்பு பணி முடங்கியது. இதை தொடர்ந்து, இரண்டாவது அலையால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, உதிரி பாகங்கள் சப்ளை பாதிக்கப்பட்டது.தயாரிப்பு பணிஅதனால் ககன்யான் திட்டம் மேலும் தள்ளி வைக்கப்பட்டது.

தற்போது கொரோனா பரவல் குறைந்து உள்ளதால், தயாரிப்பு பணி தீவிரமாக நடக்கிறது. இதையடுத்து இந்தாண்டு டிசம்பரில், ஆளில்லா ககன்யான் விண்கலத்தை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுஉள்ளது. இதற்கான பணியில் இஸ்ரோ அதிகாரிகள் இரவு, பகலாக ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்