தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும். இதை தயாரிக்கும் முறை: கிராம்பு - 2, ஏலம் - 2, சுருள் இலவங்கப்பட்டை - 1, அதிமதுரம் சிறுதுண்டு, சுக்கு சிறுதுண்டு, மிளகு - 10, மஞ்சள் சிறிதளவு இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும். இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ : மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
பசியின் உச்சம்.. கிச்சன் சுவரை உடைத்து உணவு சாப்பிட்ட யானை - வைரல் வீடியோ
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
தாய்லாந்தில் உணவு தேடி கிராமத்துக்குள் புகுந்த யானை ஒன்று சமயலறை சுவற்றை உடைத்துக் கொண்டு வீட்டில் இருந்த உணவை சாப்பிடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
வனப்பகுதியில் இருக்கும் யானைகள் உணவு தேடி வனப்பகுதியையொட்டிய கிராமங்களுக்குள் நுழைவது வழக்கமான ஒன்று. வயல்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள், காய்கறிகள், வாழைகளை சாப்பிடும். ஆனால், தாய்லாந்தில் உணவு தேடி வனப்பகுதியில் இருந்து கிராமத்துக்கு சென்ற யானை, வீட்டின் சுவற்றை உடைத்துக் கொண்டு சமயலறையில் புகுந்து, அங்கிருக்கும் உணவுகளை எடுத்துச் சாப்பிட்டுள்ளது. இதனையறிந்த வீட்டினர் அதிர்ச்சியடைந்ததுடன், யானை வீட்டிற்குள் புகுந்ததை வீடியோ பதிவு செய்துள்ளனர்.
தெற்கு தாய்லாந்தில் சாலர்ம்கியாட்பட்டனா என்ற கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. அந்த கிராமத்துக்கு அருகாமையில் கெங் கிராச்சன் தேசிய பூங்கா உள்ளது. அந்த பூங்காவில் இருக்கும் யானைகள் அடிக்கடி உணவு தேடி அந்த கிராமத்துக்கு வருவது வழக்கம். அண்மையில், வனப்பகுதியில் இருந்து வந்த யானை நேராக ராட்சடவன் புவெங்பிரசொப்பன் என்பவரின் வீட்டிற்கு சென்றுள்ளது. மோப்ப சக்தி அதிகம் இருப்பதால், அதன் வாசனையை முகர்ந்த யானை நேரடியாக சமயலறை சுவற்றை உடைத்தது, அங்கிருந்த உணவுப் பொருட்களை எடுத்து சாப்பிட்டுள்ளது.
வீட்டில் திடீரென எழுந்த சத்தத்தால் அதிர்ச்சியடைந்த ராட்சடவன், தூக்கத்தில் இருந்து விழித்து சமயலறைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது, யானையின் தலைப் பகுதி மட்டும் தெரிவதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்த அவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. உடனடியாக தன்னுடைய செல்போனை எடுத்த அவர், யானை வீட்டில் உணவுப் பொருட்கள் சாப்பிடுவதை படம்பிடித்துள்ளார். இது குறித்து பேசிய தாய்லாந்து வனத்துறை அதிகாரிகள், ராட்சடவன் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானையின் பெயர் பூன்சுவே எனக் கூறியுள்ளனர்.
கெங் கிராச்சன் தேசிய பூங்காவில் இருக்கும் அந்த யானை இதற்கு முன்பும் பலமுறை அந்த கிராமத்துக்குள் நுழைந்துள்ளதாகவும், உணவுக்காக செல்வது வாடிக்கையான ஒன்று எனக் கூறியுள்ளனர். அந்த கிராமத்தில் சந்தை ஒன்று இருப்பதால் அங்கு உணவுகள் கிடைக்கும் என பூன்சுவே யானைக்கு தெரியும் எனவும், அந்த சந்தைப் பகுதிக்கு அடிக்கடி செல்லும் என விளக்கமளித்துள்ளனர்.யானை வீட்டிற்குள் நுழைந்தது குறித்து பேசிய ராட்சடவன், நடு இரவில் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தபோது திடீரென ஏதோ ஒன்று இடிந்து விழும் சத்தம் கேட்டதாக தெரிவித்தார்.
உடனடியாக தூக்கத்தில் இருந்து விழித்து சத்தம் வரும் பகுதியை நோக்கி ஓடியதாக தெரிவித்துள்ள அவர், சமயலறையில் யானையின் தலை மட்டும் இருப்பதை பார்த்து கடும் அதிர்ச்சிக்குள்ளானதாக கூறியுள்ளார். என்ன செய்வதென்று தெரியாமல் பயந்து இருந்ததாகவும், வீட்டில் யானை புகுந்ததை பின்னர் வீடியோவாக பதிவு செய்ததாக கூறியுள்ளார். வனப்பகுதியை ஒட்டிய கிராமத்துக்குள் யானைகள் புகுவது வாடிக்கை என்றாலும், வீட்டு உணவுகளை யானைகள் தேடுவது புதிதாக இருப்பதாக நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.
பொதுவாக தொலைந்து போன ஸ்மார்ட்போனை ஒரு சில எளிய வழிமுறைகள் மூலம் மீண்டும் கண்டுபிடிக்க முடியும். குறிப்பாக ஆப்பிள் Find my phone அம்சமும், ஆன்ட்ராய்டு தளத்தில் Find your phone அம்சங்களும் இருக்கின்றன. இந்த அம்சம் நீங்கள் ஸ்மார்ட்போனுடன் சென்று வந்த இடங்கள் அனைத்தையும் டிராக் செய்து வைத்திருக்கும். அதுமட்டுமின்றி Google Map மூலம் கூட கண்டுபிடிக்க முடியும். கூகுள் மேப்ஸ் மூலம் நீங்கள் தவறவிட்ட ஸ்மார்ட்போனினை டைம்லைன் மூலம் டிராக் செய்ய முடியும். தற்போது அவை எப்படி என இங்கே பார்ப்போம். முதலில் ஸ்மார்ட்போன் அல்லது கம்ப்யூட்டரில் www.maps.google.co.in வலைத்தள முகவரிக்கு செல்ல வேண்டும். தவறவிட்ட ஸ்மார்ட்போனில் லின்க் செய்யப்பட்டிருந்த கூகுள் அக்கவுன்ட் மூலம் லாக்-இன் செய்ய வேண்டும். இனி, வலதுபுறம் மேல்பக்கம் காணப்படும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்ய வேண்டும். அடுத்து ‘Your timeline' ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இங்கு உங்களது சாதனத்தில் இருக்கும் தகவல்களில் ஆண்டு, மாதம் மற்றும் தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவிட வேண்டும். உங்களது சாதனத்தின் லொகேஷன் விவரங்களை மேப்ஸ் தற்போதைய ...
பாகிஸ்தானின் இந்த சமூகத்தின் மக்கள் 120 ஆண்டுகள் வாழ்கிறார்கள், ஒருபோதும் நோய்வாய்ப்படுவதில்லை. 120 வயது வாழும் மக்கள் இது பாகிஸ்தான் மக்களின் ஆரோக்கிய கதை 90 வயதிலும் குழந்தை பெறும் பெண்கள். ஒரு கிராமத்தில் மக்கள் 120 ஆண்டுகள் வாழ்கிறார்கள், அவர்களுக்கு நோய் ஏற்படுவதில்லை என்ற செய்தி ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், இது உண்மை தான். அதுவும், பிரச்சனைகள் அதிகம் இருக்கும் பாகிஸ்தானில்தான் அப்படியொரு ஊர் இருக்கிறது. வட பாகிஸ்தானின் ஹன்சா பள்ளத்தாக்கில் வசிக்கும் ஹன்சா சமூகத்தின் மக்கள் மீது பல வகையான ஆய்வுகள் மற்றும் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. பாகிஸ்தான், தற்போது அரசியல் மற்றும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் காரணமாக அண்மை நாட்களில் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றுள்ளது. இதுதவிர மற்றொரு சிறப்பு விஷயம் குறித்தும் பாகிஸ்தானின் பெயர் உலக அளவில் அடிபடுகிறது.. அதுதான் இங்கு குடியேறிய ஹன்சா சமூகத்தின் ஆரோக்கியம் அளிக்கும் ஆச்சரியமே விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. ஹன்சா சமூகத்தின் மக்கள் 120 ஆண்டுகள் வாழ்கின்றனர் இன்று உலகம் முழுவதும் மனிதர்களின் ஆயுட்காலம் குறைந்து வருகிறது. ம...
பாம்புகளின் பெயரை கேட்டாலே படையே நடுங்கும் என கூறுவார்கள். அப்படிப்பட்ட பாம்பிற்கு அதுவும் கருநாகத்திற்கு தண்ணீர் காட்டுவது என்றால் சும்மாவா. இணையவாசிகளை உறைய வைக்கும் வைரல் வீடியோ உங்களுக்காக. பாம்புகளின் பெயரை கேட்டாலே படையே நடுங்கும் என கூறுவார்கள். அப்படிப்பட்ட பாம்பிற்கு அதுவும் கருநாகத்திற்கு தண்ணீர் காட்டுவது என்றால் சும்மாவா. இணையவாசிகளை உறைய வைக்கும் வைரல் வீடியோ உங்களுக்காக. திடீரென்று ஒரு பாம்பை, அதுவும் கருநாக பாம்பை பார்த்தால் என்ன நடக்கும்? நம்மைக் காப்பாற்றிக் கொள்ள அலறி அடித்துக் கொண்டு ஓடுவோம். ஆனால், சமூக ஊடகங்களில் வைரலான இந்த வீடியோவில், ஒரு நபர் ஒரு கண்ணாடியில் குவளையில். விஷம் நிறைந்த கரு நாகப்பாம்புக்கு தண்ணீர் கொடுப்பதைக் காணலாம். இந்த காணொளியை பார்த்தவர்கள் பயத்தில் உறைந்து போவது உறுதி. வைரலான வீடியோவில், ஒரு நபர் தனது கையில் ஒரு கிளாஸ் தண்ணீர் வைத்திருப்பதை நீங்கள் காணலாம். அதே நேரத்தில், அவருக்கு மிக அருகில் ஒரு கருப்பு நாகத்தையும் காணலாம். இந்த வீடியோவை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த வீடியோ சிலருக்கு ஆச்சர்...
Comments
Post a Comment