நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சிவப்புக் கடற்கரை!

உலகின் மிக அழகான, கண்கவர் கடற்கரை எது தெரியுமா? சீனாவின் பன்ஜின் கடற்கரைதான்! கண்களுக்கு எட்டிய தூரம் வரை சிவப்புக் கம்பளத்தால் போர்த்தப்பட்டிருப்பதுபோல இந்தக் கடற்கரை காட்சியளிக்கும்!
இதற்குக் காரணம், கடற்கரை முழுவதும் வளர்ந்திருக்கும் சிவப்புக் கடற்பாசிகள். பன்ஜின் நகரில் ‘லியாவோஹி’ ஆறு கடலில் கலக்கும் இடத்தில் கழிமுகம் உள்ளது. தண்ணீருடன் கூடிய சதுப்பு நிலப் பகுதியாக இது இருக்கிறது. ஜனவரி முதல் மார்ச் வரை மற்ற கடற்கரைகள் போலவே காட்சியளிக்கும். ஏப்ரல் இறுதியில் வசந்த காலத்தில் பச்சை வண்ணத்தில் கடற்பாசிகள் முளைத்து, 3 மாதங்களுக்குப் பிறகு, கோடைகாலத்தில் பாசிகள் அடர் சிவப்பு வண்ணமாக மாறிவிடுகின்றன. ஆகஸ்டு முதல் அக்டோபர் வரை உலகின் அழகிய கடற்கரையாக இது காட்சியளிக்கிறது!

சிவப்பு கடலை கண்டுகளிக்க, சீனாவிலிருந்தும் பிற நாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒவ்வோர் ஆண்டும் வருகிறார்கள். சுற்றுச்சூழலுக்குத் தீங்கிழைக்காமல் பார்ப்பதற்காக 6,500 அடி நீளத்துக்கு மரப்பாலங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பாலத்தின் மீது நடந்து சென்று சிவப்புக் கடற்கரையை ரசிக்கலாம். புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளலாம். சில இடங்களில் சிவப்புப் பாசிகளுக்கு இடையே தண்ணீர் ஓடுகிறது. அங்கே படகுச் சவாரியும் நடைபெறுகிறது. அதிகாலை சூரிய உதயத்தின்போதும், மாலை சூரியன் மறையும்போதும் சிவப்புக் கடற்கரை அற்புதமான அனுபவங்களைத் தரும்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!