நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பெற்றோர் செய்யும் இந்த தவறுகள் குழந்தைகளின் சுயமரியாதையை பாதிக்கும்

குழந்தையை மற்றவர்களோடு ஒப்பிடுவது அவர்களது சுயமரியாதையை பாதிக்கும். ஒப்பிடுவதற்கு பதிலாக உங்கள் குழந்தையின் தனிப்பட்ட திறமையை கண்காணித்து அஅதை மேம்படுத்த உதவுகங்கள்.
உங்கள் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சி மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்த நீங்கள் சரியான பெற்றோராக இருக்க விரும்பினாலும், நீங்கள் அறியாமல் சில தவறுகள் செய்யக்கூடும். இது அழமான தாக்கத்தை ஏற்படுத்தும். பெற்றோர் நிச்சயமாக தவிர்க்க வேண்டிய தவறுகளை இங்கே பார்க்கலாம்.

* சுயமாக செயல்பட விடாமல் எப்போதும் உங்கள் சிறகுகளுக்குள்ளேயே வைத்து அடைகாப்பது. இதனால் அவர்கள் தனித்த போராட வேண்டிய சூழ்நிலைகளில் அவர்களால் செயல்பட முடியாமல் போகும்.

* பெற்றோர்கள் பெரும்பாலும் தங்களை அறியாமலே, தங்கள் குழந்தையின் எடை, நிறம் அல்லது நடத்தை ஆகியவற்றை விமர்சிக்கவோ அல்லது கேலி செய்யவோ செய்கிறார்கள். நகைச்சுவையாக செய்கிறீர்கள் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அந்த செயல் உங்கள் பிள்ளைக்கு கவலை அல்லது மனச்சோர்வை ஏற்படுத்தும்.

* பெற்றோர்கள் குழந்தையை அவரது நண்பர்கள் அல்லது உடன்பிறப்புகளுடன் ஒப்பிடுகிறார்கள். குழந்தையை மற்றவர்களோடு ஒப்பிடுவது அவர்களது சுயமரியாதையை பாதிக்கும். அத்துடன் அவர்களை திறமையற்றவர்களாக உணரச்செய்யும். ஒப்பிடுவதற்கு பதிலாக உங்கள் குழந்தையின் தனிப்பட்ட திறமையை கண்காணித்து அதை மேம்படுத்த உதவுங்கள்.

* பிள்ளைகள் ஏதேனும் கற்றல் சிரமத்தை எதிர்கொண்டால் சோம்பேறி அல்லது முட்டாள் என்று முத்திரை குத்துவதற்கு பதிலாக அவர்களின் பிரச்சனையை சரியான முறையில் தீர்ப்பதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

* பிள்ளைகளிடம் மிகவும் கண்டிப்பாகவும் முரட்டுதனமாகவும் நடந்துகொள்வது அவர்களை ஒழுங்குபடுத்த உதவும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறானது. இத்தகைய செயல் குழந்தைகளிடம் பதற்றத்தை அதிகப்படுத்தி அவர்களின் ஓட்டு மொத்த வளர்ச்சியை பாதிக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். அத்தகைய குழந்தைகள் மற்றவர்களிடம் ஆக்ரோஷமாக நடந்து கொள்வார்கள்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!