நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

நுரையீரல் ஆரோக்கியத்துக்கான பயிற்சி

சுவாச பயிற்சி பொதுவாக நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்துவதற்காக செய்யப்படுகிறது.
கொரோனா வைரஸ் நம்முடைய நுரையீரல் உயிரணுக்களை பாதிப்பதன் மூலமும், அவற்றின் செயல்பாடுகளை சீர்குலைப்பதன் மூலமும் உடம்பில் ஆக்சிஜன் அளவை குறைப்பதாக கூறப்படுகிறது. இதனால் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் தோன்றுகின்றன. எனவே நம்முடைய நுரையீரல் திறனை அதிகரிக்கவும், மூச்சுத் திணறலை குறைக்கவும் சுவாசப் பயிற்சி உதவுமா? என்பது தொடர்பாக, சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தனது சமீபத்திய செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சுவாச பயிற்சி பொதுவாக நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்துவதற்காக செய்யப்படுகிறது. 90 சதவீத கொரோனா நோயாளிகள் இந்த தொற்று காரணமாக நுரையீரல் பாதிப்பை அனுபவிக்கின்றனர், என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதில், 10 முதல் 12 சதவீதம் பேருக்கு நிமோனியா, நுரையீரல் தொற்று ஏற்படக்கூடும், இதில் நம் நுரையீரலில் இருக்கும் சிறிய காற்றுப் பைகள் வீக்கமடைகின்றன. கொரோனா நோயாளிகளுக்கு மிகக் குறைந்த விகிதத்திலேயே ஆக்சிஜன் ஆதரவு தேவைப்படுகிறது, மூச்சுத் திணறல் மிகவும் கடுமையான நிலைக்கு முன்னேறும் போது மட்டுமே பிரச்சினை பெரிதாகிறது. எனவே ஆரம்பத்திலேயே மூச்சுப்பிடிப்பு உடற்பயிற்சி செய்வது நன்மை அளிக்கும்.

ஒரு நபர் முந்தைய காலங்களுடன் ஒப்பிடும் போது சுவாசத்தை நீண்ட நேரம் வைத்திருக்க முடியாவிட்டால் அது கொரோனா நோய்த்தொற்றின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். இருமல் அல்லது அசவுகரியம் இல்லாமல் 10 வினாடிகளுக்கு மேல் மூச்சு பிடித்து வைத்திருப்பது நல்ல நுரையீரல் செயல்பாடு மற்றும் கொரோனா அபாயத்தை குறைக்கும்.

மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களும், வீட்டில் ஆக்சிஜனை பயன்படுத்தும் நபர்களும் சுவாச பிடிப்பு பயிற்சி செய்வது ஆக்சிஜன் தேவையை குறைக்க உதவும். மேலும் அவர்களின் நுரையீரலை ஆரோக்கியமாக வைக்கவும் உதவுகிறது.

உடற்பயிற்சியின் போது நீண்ட நேரம் மூச்சை பிடித்து வைத்திருப்பது சில பக்க விளைவுகளை உண்டாக்கும். மூச்சுப்பயிற்சி செய்யும் போது நேராக உட்கார்ந்து கொள்ளுங்கள். உங்கள் தொடைகளில் கைகளை வைத்துக் கொள்ளுங்கள். இப்போது உங்கள் வாயைத் திறந்து மார்பை அதிகபட்சமாக நிரப்ப, உங்களால் முடிந்த அளவு காற்றை உள்ளிழுக்கவும். பின்னர், உதடுகளை இறுக்கமாக மூடி. உங்களால் முடிந்தவரை உங்கள் மூச்சை தக்க வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். எவ்வளவு நேரம் வைத்திருக்கிறீர்கள் என்று கவனியுங்கள்.

நீங்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை என மூச்சுப் பிடிப்பு பயிற்சியை செய்யலாம். 25 விநாடிகள் அதற்கு மேலாக மூச்சை பிடிப்பது பாதுகாப்பாக இருக்கும். மூச்சைப் பிடிக்க மிகவும் கடினமாக முயற்சி செய்ய வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்