நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

நீரிழிவு நோயாளிகளுக்கான ‘சுகர்ஃபிரீ’ மாம்பழம்: பாகிஸ்தானில் அறிமுகம்!

சர்க்கரை அளவு அதிகம் உள்ள மாம்பழத்தின் சுவையை நீரிழிவு நோயாளிகள் எவ்வாறு அனுபவிக்க முடியும்? இது தொடர்பாக யோசித்த பாகிஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர், சுகர் ஃபிரீ மாம்பழ வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளார்.
நீரிழிவு நோயாளிகளும் ருசித்து மகிழும் வகையில் சுகர் ஃபிரீ மாம்பழங்கள்பாகிஸ்தானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தின் சுவைக்கு சொக்கிப் போகாதவர்களே இருக்க முடியாது. அல்ஃபோன்சா, மல்கோவா, பங்கனபள்ளி என மாம்பழங்களில் பல விதங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தனி தன்மையுடன் கூடிய சுவை மிக்கவை. தற்போது மாம்பழ சீசன் தொடங்கிய நிலையில், மில்க்சேக், ஐஸ்கிரீம், ஜூஸ் என எங்கும் மாம்பழமே வியாபித்திருக்கின்றன.

அதேவேளையில், சர்க்கரை அளவு அதிகம் உள்ள மாம்பழத்தின் சுவையை நீரிழிவு நோயாளிகள் எவ்வாறு அனுபவிக்க முடியும்? இது தொடர்பாக யோசித்த பாகிஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர், சுகர் ஃபிரீ மாம்பழ வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளார்.

பாகிஸ்தானின் சிந்து பகுதியில் இயங்கி வரும் எம் எச் பன்வார் ஃபார்ம்ஸ் பண்ணையைச் சேர்ந்த மாம்பழ நிபுணரான குலாம் சர்வார் சில மாறுதல்கள் மூலம் இந்த மாம்பழங்களை உருவாக்கியுள்ளார். சோனாரோ, க்ளென், கீட் என இந்த மாம்பழங்களுக்கு பெயரிடப்பட்டுள்ளது.

சிந்துரி மற்றும் சவுன்ஸ் வகை மாம்பழங்களில் 12 முதல் 15 சதவீதம் வரை சர்க்கரை அளவு உள்ள அதேவேளையில், தங்கள் பண்ணையில் உள்ள சில மாம்பழங்களில் 4முதல் 5 சதவீதம் மட்டுமே சர்க்கரை அளவு உள்ளதாக தெரிவித்துள்ள அவர், கீட் வகை மாம்பழத்தில் 4.7 சதவீதம் மட்டுமே சர்ச்சை அளவு உள்ளது. சொனாரோ, க்ளேன் வகை மாம்பழங்களில் 5.6 மற்றும் 6 சதவீதம் சர்க்கரை அளவு உள்ளது” என தெரிவித்துள்ளார்.

ஏழைகளும் உண்ணும் வகையில் கிலோ ரூ.150 என மிகக் குறைந்த விலையில் பாகிஸ்தான் சந்தைகளில் இந்த மாம்பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!