நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வீட்டிற்குள்ளும் விழிப்புணர்வு தேவை

வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்’ என்பது கொரோனா வைரஸ் கற்றுக்கொடுத்த வாழ்க்கை பாடமாக மாறிவிட்டது. ஊரடங்கு காலத்தில் பெரும்பாலானோர் வீட்டிலேயேதான் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள்.
வைரஸ் தொற்றுவில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு வீடு தான் பாதுகாப்பான இடமாக அமைந்திருக்கிறது. அதற்கேற்ப வீட்டை சுத்தமாகவும், தூய்மையாகவும் பராமரிப்பது அவசியமானது. சுவாசிக்கும் காற்றும் தூய்மையாக இருக்க வேண்டும். ஏனெனில் காற்று மாசுபாடு என்றதும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை, நச்சுக்கழிவுகள், வாகனங்கள் வெளியேற்றும் புகை, குப்பைக்கூளங்களில் இருந்து வெளியேறும் துர்நாற்றம்தான் பெரும்பாலானோருக்கு நினைவுக்கு வரும். ஆனால் வீட்டிற்கு உள்ளே உருவாகும் காற்று மாசுவை பலரும் கவனத்தில் கொள்வதில்லை. இதில் உண்மை என்னவென்றால் உட்புற காற்று மாசு வெளிப்புற காற்று மாசுவை விட 10 மடங்கு மோசமானது. உலக அளவில் பெரும்பாலானோர் தங்கள் அன்றாட வாழ்க்கையின் பெரும் பகுதியை வீடு, வேலை செய்யும் இடம், பள்ளிக்கூடங்களில்தான் செலவிடுகிறார்கள். கொரோனா தொற்று வீட்டிற்குள் செலவிடும் நேரத்தை அதிகரிக்க வைத்துவிட்டது. அதனால் கூடுதல் பாதுகாப்புடன் வீட்டிற்குள் இருக்க வேண்டியது அவசியமானது.

வீட்டின் உள்புற காற்று மாசுபடுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. கிராமப்புறங்களில் சமைப்பதற்கு மரத்துண்டுகள் பயன்படுத்துவது, மண்ணெண்ணெய் விளக்குகள் உபயோகிப்பது காற்று மாசுபாட்டுக்கு வழி வகுக்கக்கூடும். நகர்ப்புறங்களில் நெரிசலான இடங்களில் வசிப்பது, மோசமான காற்றோட்ட வசதி, குளிர்சாதனங்களை சரியாக பராமரிக்காதது போன்றவை காற்று மாசுபாடுடன் தொடர்புடையவை. ஊதுவத்திகள், அறை யில் நறுமணம் வீசுவதற்காக பயன்படுத்தப்படும் ‘ரூம் பிரெஷ்னர்கள்’, கொசு விரட்டிகள் போன்றவை ஆவியாகும் கரிம சேர்மங்களை கொண்டிருக்கின்றன. எல்.பி.ஜி. கியாஸ் வெளியிடும் புகை, சமையலறை புகை, தூசுகள், வீட்டை சுத்தம் செய்யும் கிளனர்கள் போன்றவைகூட காற்று மாசுபாடுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கின்றன.

இந்தியாவில் ஆண்டுதோறும் 26 லட்சம் பேரின் மரணத்திற்கு வீட்டின் உள்புற காற்று மாசுவும் ஒருவிதத்தில் காரணமாக இருக்கிறது. இது எய்ட்ஸ், மலேரியாவை விட பெரும் அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது. குறிப்பாக நிமோனியா, மூச்சுக்குழாய் அழற்சி, நாள்பட்ட நுரையீரல் கோளாறு (சி.ஓ.பி.டி) மற்றும் நுரையீரல் புற்றுநோய் ஆகியவை உட்புற காற்று மாசுபாட்டுடன் தொடர்புடையவையாக இருக்கின்றன. வீட்டில் காற்றின் தரம் குறைந்து மாசுபட்டிருந்தால் இருமல், தொண்டையில் எரிச்சல், கண் எரிச்சல், கண் உலர்வடைதல், தலைவலி, குமட்டல் மற்றும் சோர்வு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடும். வீட்டினுள் காற்றின் தரத்தை மேம் படுத்துவதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

குளியல் அறையை காற்றோட்ட வசதியுடன் வைத்திருப்பது அவசியமானது. அங்கு காற்றை சீரமைப்பதற்கு ‘எக்ஸாஸ்ட் பேன்’ நிறுவுவது நல்லது.

வீட்டை சுத்தப்படுத்த பயன்படுத்தும் ரசாயனப்பொருட்களும் காற்றில் கலந்து மாசுவை உருவாக்கும். அதனால் வீட்டை சுத்தம் செய்யும்போது முக கவசம் அணிந்துகொள்வது நல்லது.

வீட்டிற்குள்ளோ, குளியல் அறையிலோ புகைப்பிடிப்பதை தவிர்ப்பதும் நல்லது. அது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பதோடு உள்புற காற்றையும் மாசுபடுத்தும். அதனால் வீட்டில் இருக்கும் மற்ற நபர்களும் பாதிப்புக்கு ஆளாவார்கள்.

சமைக்கும் போது, ஜன்னல்களைத் திறந்து வையுங்கள். அல்லது ‘எக்ஸாஸ்ட் பேன்’ மூலம் சமையல் அறை புகையை வெளியேற்றுங்கள்.

வீட்டை சுத்தம் செய்தாலோ, வேறு வேலைகள் செய்தாலோ ஜன்னல்களை திறந்தே வைத்திருங்கள். வெளிக்காற்று அறைக்குள் ஊடுருவி காற்றின் தரத்தை மேம்படுத்தும்.

சாலையோரமாகவோ, மாசு அதிகம் கொண்ட பகுதியிலோ வசித்தால் காற்றை சுத்திகரிக்கும் செடிகளை உள் அறைகளில் வளர்ப்பது நல்லது. காற்றை சுத்திகரிக்கும் கருவியையும் வீட்டில் நிறுவலாம்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!