நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உற்சாகத்திற்கு முந்திரி

உற்சாகத்திற்கு முந்திரி

முந்திரி பருப்பில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பும் உள்ளது. இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
முந்திரியை அரைத்து சருமத்தில் தடவினால் முகம் அழகாகவும் மென்மையாகவும் இருக்கும். முடி உதிர்தல் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் முந்திரி பருப்பை சாப்பிட்டு வரலாம். மேலும் முந்திரியில் பொட்டாசியம், வைட்டமின் ஈ, செலினியம் மற்றும் துத்தநாகம் போன்றவையும் உள்ளன. அவை உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதிலும், புற்றுநோயைத் தடுப்பதிலும், தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.


குழந்தை பருவத்தில் மனச்சோர்வு அடைபவர்கள் உடல் பருமன், சுறுசுறுப்பின்மை, செயலற்ற தன்மை போன்ற சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். இளமை பருவத்தில் இதய நோய் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கும் என்பது அமெரிக்காவின் தெற்கு புளோரிடா பல்கலைக்கழகம் நடத் திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. முதுமை ஒரு நபரின் மனத்திறன், ஆளுமை மற்றும் நடத்தை ஆகியவற்றை பாதிக்கிறது. மனச்சோர்வு உள்ளவர்களுக்கு முதுமையில் டிமென்ஷியா எனப்படும் ஞாபக மறதி இரு மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று புதிய ஆய்வு தெரிவித்துள்ளது. ஒரு நபர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டால், அவருக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் சராசரி மனிதரை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும் என்றும் சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மனச்சோர்வுடன் வாழ்பவர்களுக்கு காது கேளாமை பிரச்சினை உண்டாகுவதற்கான வாய்ப்பும் அதிகம். ஆண்களை விட பெண்கள்தான் அதிக பாதிப்புக்குள்ளாவதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. முந்திரி பருப்பு சாப்பிடுவதன் மூலம் இத்தகைய பிரச்சினைகளில் இருந்து ஓரளவு தப்பித்துக் கொள்ளலாம்.


Also read. 

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!