லாக்டவுனிற்கு பின் வீட்டை விட்டு வெளியே செல்வோர் தவறாமல் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்..!
- Get link
- X
- Other Apps
இரண்டாம் அலை நமக்கு காட்டிய கோரத்தை மனதில் கொண்டு தொற்று நோயிலிருந்து பாதுகாப்பாக இருக்க நாம் எப்போதும் மிகுந்த கவனத்துடன் வெளியே செல்ல வேண்டியது அவசியம்.
சுமார் 3 மாதங்களுக்கு மேலாக நாட்டை ஆட்டிப்படைத்து வரும் கோவிட்-19 தொற்றின் இரண்டாம் அலை தற்போது மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. முதல் அலையை விட இரண்டாம் அலை பெரும் சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாமல் பல மாநிலங்கள் திணறியதை கண்கூடாக காண முடிந்தது.
நிரம்பி வழிந்த மருத்துவமனைகள், ஆக்சிஜன் சிலண்டர்கள் மற்றும் மருத்துவமனைகளில் அட்மிஷன் கிடைக்காமல் உயிரிழந்த கொரோனா நோயாளிகள், இடுகாடுகளில் கொத்து கொத்தாக எரிக்கப்பட்ட நோயாளிகளின் பிணங்கள் என இரண்டாம் அலை நமக்கு உணர்த்திய பாடங்கள் அதிகம்.
தமிழகம் உட்பட பல மாநிலங்களில் தொற்று பாதிப்புகள் கணிசமாக குறைந்துள்ளதை தொடர்ந்து லாக்டவுன் உள்ளிட்ட பிற கட்டுபாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. சில வாரங்கள் மற்றும் மாதங்கள் வீடுகளுக்குளேயே முடங்கி இருந்த மக்கள் தற்போது வீடுகளை விட்டு வெளியே வர துவங்கி உள்ளனர். லாக்டவுன் காரணமாக செயல்படாமல் இருந்த சில நிறுவனங்கள் தற்போது மீண்டும் பணிகளை துவக்கி உள்ளன.
இரண்டாம் அலை நமக்கு காட்டிய கோரத்தை மனதில் கொண்டு தொற்று நோயிலிருந்து பாதுகாப்பாக இருக்க நாம் எப்போதும் மிகுந்த கவனத்துடன் வெளியே செல்ல வேண்டியது அவசியம். அத்தியாவசிய ஷாப்பிங் அல்லது அலுவலக பணிகளுக்காக பாதுகாப்பான வீட்டின் எல்லைகளை தாண்டி வெளியே செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளவர்கள் கீழ்காணும் விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.
* கடந்த ஓராண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் கொரோனாவிற்கு எதிரான போரில் முக்கிய ஆயுதமாக நமக்கு இருந்து வருவது மாஸ்க். எனவே வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு முன் ஒரே நேரத்தில் 2 மாஸ்க்குகள் போட்டு கொள்ளுங்கள். சில வகை மாஸ்க்குகளை வெளியே நீண்ட நேரம் போட்டு கொள்ள முடியாது. எனவே தரமான மாஸ்க்குகளை வாங்கி பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
* தொற்று எங்கே, எப்போது, யாரால், எதனால் பரவும் என்று தெரியாத நிலையில் எப்போது வெளியே சென்றாலும் ஆல்கஹால் அடிப்படையிலான ஹேண்ட் சானிட்டைசர் ஒன்றை எடுத்து செல்ல மறக்காதீர்கள்.
* மேற்பரப்புகளை நேரடியாக நம் கைகளால் தொடுவதை தவிர்க்க கையுறைகளை பயன்படுத்தலாம்.
* கூடுமானவரை இன்னும் சில வாரங்களுக்கு பொது போக்குவரத்தை பயன்படுத்துவதை தவிர்க்கவும். இந்த இக்கட்டான நேரத்தில் கட்டாயம் வெளியே செல்ல வேண்டும் எனில் உங்களது சொந்த வாகனத்தை யன்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுங்கள். அப்படி இல்லையென்றால் ஒரு cab அல்லது ஆட்டோவை புக் செய்து நீங்கள் மட்டுமே அதில் பயணிக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்.
* அத்தியாவசிய பொருட்களை வாங்க கடைக்கு சென்றால் கூட்டமாக இருக்கும் கடைகளுக்கு செல்வதை தவிர்க்க முயற்சிக்கவும். அல்லது கூட்டம் இல்லாத நேரத்தில் சென்று பொருட்களை வாங்கலாம்.
* வெளி இடங்களில் இருக்கும் போது தப்பித்தவறி கூட உங்கள் கண்கள், வாய் மற்றும் மூக்கை சுத்தப்படுத்தாத உங்கள் கைகளால் தொடாதீர்கள். கையுறைகளை அணியவில்லை என்றால் அவ்வப்போது உங்கள் கைகளை சானிட்டைசர் கொண்டு சுத்தப்படுத்தி கொள்ளுங்கள்.
* எப்போதுமே வெளியில் அதிக நேரம் செலவிட வேண்டாம். நீங்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைக்கு செல்கிறீர்கள் என்றால் அந்த வேலையை மட்டும் முடித்து கொண்டு சீக்கிரம் வீடு திரும்ப முயற்சியுங்கள்.
* வெளியே சென்று வந்த பிறகு சோப்பு அல்லது சானிட்டைசர் பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்தி கொள்ளுங்கள்.
* வீடு திரும்பியதும் உங்கள் உடமைகளை சுத்தம் செய்து கொள்ளுங்கள். காய்கறிகள் அல்லது பழங்கள் வாங்கியிருந்தால், அவற்றை குறைந்தபட்சம் 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து நன்றாக அலசி விடுங்கள்.
* நீண்ட நேரம் வெளியே சென்று விட்டு வீட்டிற்குள் நுழைந்தால் குளித்துவிட்டு உங்கள் துணிகளை துவைத்து விடுங்கள். குளிக்கும் முன் வீட்டில் இருக்கும் யாரையும் மற்றும் எந்த பொருட்களையும் தொடாமல் இருங்கள்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment