நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உலகின் மிக உயர்ந்த சொகுசு ஹோட்டல் சீனாவில் திறப்பு!

ஷாங்காய்
ஷாங்காய் டவர் கட்டடத்தின் 120-வது மாடியில் உலகின் மிக உயர்ந்த சொகுசு ஹோட்டலை அமைத்துள்ளனர். அதன் திறப்பு விழா சமீபத்தில் நடந்துள்ளது.

துபாயின் புர்ஜ் கலீபாவுக்கு அடுத்தப்படியாக உலகின் 2-வது உயரமான கட்டிடம் ஷாங்காய் நகரில் அமைந்துள்ள ஷாங்காய் டவர் ஆகும். சுமார் 2 ஆயிரம் அடிகளுக்கும் மேல் உயரம் கொண்டது. இந்த கட்டடத்தின் மேல் தளங்களில் ஜெ ஹோட்டல்ஸ் என்ற நிறுவனம் தங்கும் விடுதி, உணவு விடுதி, நீச்சல் குளம், ஸ்பா, பார் போன்றவற்றை அமைத்துள்ளது. முன் கூட்டியே திறக்கப்பட இருந்த இந்த ஹோட்டல் கொரோனா பெருந்தொற்றால் காலதாமதமாகி தற்போது திறப்பு விழா கண்டுள்ளது.
இந்த சொகுசு ஹோட்டலை சீன அரசுக்கு சொந்தமான ஜின் ஜியாங் இன்டர்நேஷனல் ஹோட்டல்ஸ் குழு அமைத்துள்ளது. முழுக்க முழுக்க வசதிப்படைத்தவர்களுக்கான ஹோட்டலாக வடிவமைத்துள்ளனர். திறப்பு விழா சலுகையாக (!) ஒரு இரவு தங்க ரூ.35 ஆயிரம் என அறிவித்தனர். அதிலுள்ள பிரம்மாண்ட சூட் அறைகளுக்கு கடும் டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் அந்த சூட் அறைகளில் தங்க ஒரு இரவுக்கு ரூ.6.5 லட்சத்துக்கும் மேல் விலை நிர்ணயித்துள்ளனர்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!