நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்த டைனோசார்களின் காலடி தடம்

இங்கிலாந்து நாட்டில் 10 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த 6 வகை டைனோசார்களின் காலடி தடம் கண்டறியப்பட்டு உள்ளது.
லண்டன்,

இங்கிலாந்து நாட்டின் கென்ட் நகரில் ஃபோல்க்ஸ்டோன் பகுதியில் மலை குன்றுகள் மற்றும் கடற்கரை முகப்பு பகுதிகளில் டைனோசார்களின் காலடி தடங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.

இதுபற்றி டைனோசார்கள் பற்றிய ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ள பேராசிரியர் டேவிட் மார்டில் கூறும்பொழுது, இந்த பகுதியில் டைனோசார்களின் காலடி தடம் கண்டறியப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை.

அவை முற்றிலும் அழிந்து போவதற்கு முன் கடையாக இந்த நாட்டில் உலா வந்திருக்க கூடும். அவை நெருங்கியபடி நடந்து சென்றுள்ளன. 10 கோடி ஆண்டுகளுக்கு முன் கிரெட்டேசியஸ் காலத்தின் முடிவு பகுதியில் தெற்கு இங்கிலாந்தில் பல்வேறு வகையான டைனோசார்கள் இருந்துள்ளன என அவற்றின் காலடி தடங்கள் காட்டுகின்றன.

அவற்றில் ஆங்கைலோசார்கள் எனப்படும் கவச உடை போன்ற தோற்றம் கொண்ட டைனோசார்கள், டைரன்னோசாரஸ் ரெக்ஸ் போன்ற அசைவ உண்ணிகளான 3 விரல்களை கொண்ட டைனோசார்கள், பறவைகளின் வடிவம் கொண்ட சைவ உண்ணிகளான டைனோசார்கள் ஆகியவை இருக்க கூடும்.

ஒரு சில காலடி தடங்கள், யானையின் காலடி தடம் அளவுக்கு ஒத்து போகிறது. அவை ஆர்னித்தோபோடிக்னஸ் வகையை சார்ந்த ஒன்றாக இருக்கலாம் என்றும் அடையாளம் காணப்பட்டு உள்ளது. எனினும், சிறிய வகை காலடி தடங்களும் இதே காலகட்டத்தில் சீனாவில் கண்டறியப்பட்டு உள்ளது.

இதுதவிர, 10 மீட்டர் உயரம் கொண்ட, 2 கால்களால் அல்லது 4 கால்களாலும் நடக்க கூடிய சைவ உண்ணிகளான இகுவானோடன்கள் போன்ற டைனோசார்களின் காலடி தடமும் அடையாளம் காணப்பட்டு உள்ளது. அது 80 செ.மீ. அகலம் மற்றும் 65 செ.மீ. நீளம் கொண்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

ஒரே இடத்தில் இத்தனை வகை காலடி தடங்கள் கண்டறியப்பட்டு இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. உணவு அல்லது புலம்பெயர்தலுக்காக இந்த வழிகளை தேர்வு செய்து அவை சென்றிருக்க கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்