நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பசிக்கு சாப்பிடணும்… இது நமக்கு மட்டுமல்ல, பாம்புகளுக்கும் பொருந்தும்

பாம்புகள் ஆபத்து என்று உணரும் போதும் இவ்வாறு சாப்பிட்ட உணவை வெளியேற்றும்
ஒவ்வொரு நாளும் வன உயிரினங்களின் செயல்பாடுகள், சேட்டைகள், ரசிக்க வைக்கும் நிகழ்வுகளை நாம் வைரல் பிரிவில் பார்த்து, ரசித்து வருகின்றோம். சமயத்தில் பாம்பு புகைப்படங்கள், வீடியோக்கள் கூட மக்களிடம் நல்ல வரவேற்பையும், நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களையும் கற்று தருகிறது என்பதில் சந்தேகம் இல்லை.

இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் பாம்பு ஒன்று தான் விழுங்கிய முட்டைகளை மீண்டும் வாய்வழியே வெளியேற்றும் காட்சிகள் பதிவாகியுள்ளது. உங்களின் ஜீரண சக்திக்கு அதிகமானதை உட்கொள்ளாதீர்கள் என்று அவர் கேப்ஷன் ஒன்றை எழுதி இந்த வீடியோவை ஷேர் செய்துள்ளார். மேலும் பிடிக்கப்பட்ட இந்த பாம்பு பத்திரமாக வனத்திற்குள் விடப்பட்டது எந்த தகவல்களையும் வெளியிட்டுள்ளார்.

8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்ந்த வீடியோவை பார்வையிட்டுள்ளனர். பலர் தங்களின் கருத்துகளையும் பதிவு செய்துள்ளனர். அதில், பாம்புகள் ஆபத்து என்று உணரும் போதும் இவ்வாறு சாப்பிட்ட உணவை வெளியேற்றும் என்றும், ஆபத்து காரணமாக வெகு தூரம் ஊர்ந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்படும் போது மந்தமான வயிறு ஆபத்தை விளைவிக்கும் என்றும் கூறியுள்ளனர்.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்