நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மன அழுத்தங்களும்.. ஆரோக்கியமும்..

மன அழுத்தம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து மன அழுத்தம் நீடிக்கும்போது நோயெதிர்ப்பு சக்தி பலவீனமடைந்துவிடக்கூடும்.
உயர் ரத்த அழுத்த பாதிப்பும் ஏற்படும். மனச்சோர்வு, பதற்றம் போன்ற பாதிப்புகள் ஏற்படவும் வழிவகுக்கும். இதயத்தில் கூட எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் எல்லா வகையான மன அழுத்தங்களும் ஆரோக்கியத்திற்கு எதிரி அல்ல. சில சமயங்களில் மன அழுத்தம் நன்மைகளுக்கு வழிவகுக்கும் என்பது ஆய் வில் தெரிய வந்துள்ளது. ‘ஸ்ட்ரெஸ் ஹெல்த்’ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், ‘ஒரு நபர் மன அழுத்தத்தில் இருக்கும்போது, அவர் மற்ற நபரிடமிருந்து உணர்ச்சிப்பூர்வமான ஆதரவைப் பெறுவதற்கும் அதிக வாய்ப்புள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒருவர் மன அழுத்தத்தில் இருக்கும் சமயத்தில் தன்னிடம் நெருக்கமாக பழகுபவர் ஆதரவாக பேசினால் அப்போது மனதில் தேக்கி வைத்த உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய சந்தர்ப்பம் உருவாகும். அது மன அழுத்தத்தில் இருந்து அவரை விடுபட வைக்கும் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இந்த ஆய்வுக்காக 1622 பேரை தேர்ந்தெடுத்து தொடர்ந்து 8 நாட்கள் இரவு நேரத்தில் கேள்விகள் கேட்டு அவர்களின் மன உணர்வுகளை பதிவு செய்திருக்கிறார்கள். ஆய்வின் முடிவில் மன அழுத்தத்தை அனுபவித்த நாட்களில் உணர்வு ரீதியாக தாங்கள் அனுபவிக்கும் மன வேதனையை பதிவு செய்திருக்கிறார்கள். மன அழுத்தம் இருந்த நாட்களில் மற்றவர்களின் ஆதரவை பெறுவதற்கு பெரும்பாலானவர்கள் முயற்சித்திருக்கிறார்கள். ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்கள்தான் வெளிப்படைத் தன்மையுடன் இந்த ஆய்வுக்கு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார்கள்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்