நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சீன நதியின் குறுக்கே உலகின் 2வது பெரிய நீர் மின்சார இயந்திரம்..!

யுனான்: 
நீர் மூலமாக மின்சாரம் தயாரிக்கும் உலகின் இரண்டாவது பெரிய இயந்திரத்தை சீனா முன்னதாக உருவாக்கி இருந்தது.
தற்போது இந்த நீர் மின்சார இயந்திரம் பயன்படுத்த சீன அரசு அனுமதி வழங்கியுள்ளது. அனல்மின் நிலையம் மற்றும் அணுமின் நிலையம் ஆகியவற்றால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படும் நிலையில் காற்றாலை, நீர், சூரிய ஒளி ஆகிய இயற்கைக்கு மாசு ஏற்படுத்தாத, மீண்டும் பெறத்தக்க முறைகள் மூலமாக மின்சாரம் தயாரிக்க உலகம் முழுவதும் விஞ்ஞானிகளால் வலியுறுத்தப்படுகிறது.

இந்த நீர் மின்சார இயந்திரம் 289 மீட்டர் (948 அடி) உயரம் கொண்டது. தென்மேற்கு சீன பகுதியில் உருவாகியிருக்கும் இந்த நீர் மின்சார இயந்திரம் ஐந்து லட்சம் கோடி மக்களின் மின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் அளவுக்கு 16 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் என கூறியுள்ளது சீன அரசு தரப்பு.
அரசு தீவிர முயற்சி

உலகின் அதிக மக்கள் தொகைகொண்ட சீன நாட்டில் நாளுக்குநாள் தொழிற்சாலைகள் மற்றும் குடிமக்களின் தேவைக்காக அதிக அளவு மின்சாரம் தேவைப்படும் நிலையில் கடந்த ஓராண்டாக நீர் மூலமாக மின்சாரம் தயாரிக்க சீன கம்யூனிச அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.

அதன் பயனாகவே தற்போது இந்த மின்சார இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. சீனாவின் யுனான் மற்றும் சிச்சுவான் மாகாணங்களுக்கு இடையே உள்ள சீனாவின் நீளமான நதியாகிய யாங்சே நதியின் குறுக்கே பிரம்மாண்ட பாலம் அமைக்கப்பட்டு இந்த சுழலும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. தண்ணீர் இதன்மீது விழுந்து இயந்திரத்தை சுழற்றி, அதன்மூலமாக மின்சாரம் தயாரிக்கப்படும்.
தண்ணீர் மூலமாக மின்சாரம் தயாரிக்கப்படுவதால் சீன நாட்டில் காற்றில் பரவும் கார்பன் அளவு வெகுவாகக் குறையும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!