தீவிர சுற்றுச்சூழல் காரணமாக சிலந்திகள் முரட்டுத்தனமாக மாற வாய்ப்பிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தில் (Mcmaster University) ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் சூறாவளி, புயல் போன்ற தீவிர சுற்றுச்சூழல் மாற்றங்களால் சிலந்திகள் முரட்டுத்தனமாக மாற வாய்ப்பிருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த சுற்றுச்சூழல் மாற்றத்தால் சிலந்திகளை ஊண் உண்ணக் கூடியதாக மாறி, அது தனது சந்ததிக்கும் தொடரச் செய்யுமாம். மேலும் சிலந்திகள் தான் உயிர்வாழ்வதற்காக வாழ்விடங்களை, குறிப்பாக மரங்கள் அழிக்கத் துவங்கும் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இது நம் சுற்றுச்சூழலை புரிந்துகொள்வதன் அவசியத்தை நமக்கு உணர்த்துகிறது. இதுகுறித்து விஞ்ஞானிகள் புயல், சூறாவளி போன்ற இயற்கை சீற்றங்கள் நடைபெறும் இடங்களில், புயல் நடைபெறுவதற்கு முன்பும், பின்பும் சுமார் 250 சிலந்திகளை ஆராய்ந்துள்ளனர். புயல் சூறாவளிகளை கணிப்பதற்காக வானிலை தகவல்களை ஆராய்ந்துள்ளனர். மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆல்பர்டோ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதீத கவனம் செலுத்தினர். அங்கே சிலந்திகளின் தன்மையை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அவைகள் சாந்தமானது மற்றும் முரட்டுத்தனமானது என வகைப்படுத்தினர்.
இதில் முரட்டுத்தனமானவை என வகைப்படுத்தப்பட்ட சிலந்திகள் ஊண் உண்ணக்க கூடியது என கணித்துள்ளனர். விஞ்ஞானிகள் புயலுக்கு சற்று முன் சிலந்திகளை சேகரித்தனர். முரட்டுத்தனமான சிலந்திகள் பயமுறுத்துவதாக இருந்தாலும் அவை வளங்களை பெறுவதில் முக்கியமானதாக இருக்கும். முரட்டுத்தனமான சிலந்தி வகைகள் உணவக்காக தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்ளும். வெப்பநிலை அதிகரிப்பதும் இந்த சண்டைக்கு வழிவகுக்கும்.
சிலந்திகளில் முரட்டுத்தனம் என்பது அடுத்த தலைமுறைக்கும் அதாவது தாய் சிலந்தியிடம் இருந்து சேய் சிலந்திக்கும் பரவும். இந்த முரட்டுத்தனம் உயிர்வாழ்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கான திறனுக்கும் ஒரு முக்கிய காரணியாகும். சிலந்திகளுக்கு அதன் ஆக்கிரமிப்பு திறன் அதிக முட்டைகளை உருவாக்கவும் வரவிருக்கும் குளிர்காலத்தில் அதனை தக்கவைக்கவும் உதவும் என்று இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஸ்பைடர் மேன் படம் வெளியான சமயத்தில் சிலந்திகள் குறித்த அச்சம் இருந்தது. சிலந்திகள் கடிக்குமா ? அப்படி கடித்தால் நாமும் ஸ்பைடராக மாறிவிடுவோமா என்ற கேள்வி எழாத குழந்தைகளே இல்லை எனலாம். அது ஒருவகையில் கற்பனை கதை தான் என்பதால் அது குறித்து கவலைப்படத் தேவையில்லை என குழந்தைகளைப் பெற்றோர்கள் சமாதானப்படுத்தினர்.
ஆனால் மேற்சொன்ன செய்தி கற்பனையில்லை. காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் மாற்றத்தால் பல்வேறு பாதிப்புகளை பூமி சந்தித்து வருகிறது. தற்போது சிலந்திகள் முரட்டுத்தனமாக மாறிவருவது கவலையடையச் செய்யக் கூடியதாக இருக்கிறது. மக்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்த செய்தில் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய உண்மை. இயற்கை சீற்றங்களுக்கு நாம் காரணமாக முடியாது என்றாலும், புவி வெப்பமயமாதலுக்கு நாம் தான் காரணம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
Comments
Post a Comment