நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

காதலுக்கு கண் இல்லை' கின்னஸ் சாதனை படைத்த பிரித்தானிய ஜோடி!

உடல் உயரத்தில் அதிக வித்தியாசம் உடைய பிரித்தானிய ஜோடி, உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.

பிரித்தானியாவில் லண்டனைச் சேர்ந்தவர் ஜேம்ஸ், 33. இவர் தோகைக்காட்சி நடிகர் மற்றும் தொகுப்பாளர் ஆவார்.

இவரது மனைவி ஷோலி, 27 (Chloe Lusted) ஆசிரியையாக பணியாற்றுகிறார். இவர்கள் 2013-ல் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இதில் சிறப்பு என்னவென்றால், ஜேம்ஸ்சின் உயரம் 109.3 செ.மீ (3 அடி 7 அங்குலம்), ஷோலியின் உயரம் 166.1 செ.மீ., (5 அடி 5.4 அங்குலம்). இருவருக்குமான உயர வித்தியாசம், 56.8 செ.மீ., (1 அடி, 10 அங்குலம்) கிட்டத்தட்ட 2 அடி ஆகும்.
இந்த உயர வித்தியாசமே, இவர்கள் ஜூன் 2-ஆம் திகதி உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்ததற்கான காரணமாக அமைந்தது. ஆம், இந்த சிறப்பு தம்பதிக்கு 'ஆண் உயரம் குறைவு; பெண் உயரம் அதிகம்' என்ற பிரிவில் இந்த சான்றிதழ் வழங்கப்பட்டது.

Diastrophic Dysplasia என்ற மரபணு கோளாறால் பாதிக்கப்பட்டவர் ஜேம்ஸ். இதனால், இவரது எலும்பு மற்றும் உடல் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.

2012-ஆம் ஆண்டில், ஜேம்ஸ் தனது சொந்த ஊர் வழியாக ஒலிம்பிக் ஜோதியை எடுத்துச் சென்ற சிறிது நேரத்திலேயே, சில நண்பர்கள் அவரை சோலிக்கு அறிமுகப்படுத்தினர். சோலிக்கு, இது முதல் பார்வையிலேயே ஜேம்ஸை மீது காதல் மலர்ந்தது.
சோலி உயரமான ஆண்களை விரும்பினார். இருப்பினும், ஜேம்ஸைச் சந்தித்தபோது அவரது காதல் அவரது பார்வையை மாற்றியது.

பல சிரமங்களை எதிர்கொண்ட பிறகு, அவர்கள் அதிகாரப்பூர்வமாக 2013-ஆம் ஆண்டின் இறுதியில் திருமணம் செய்து கொண்டனர். இந்த அசாதாரண தம்பதியினருக்கு இப்போது ஒலிவியா என்ற இரண்டு வயது மகள் உள்ளார். 'காதலுக்கு கண் இல்லை' எனும் கூற்று உண்மை என்பதை இவர்களது வாழ்க்கை மீண்டும் நிரூபிக்கிறது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்