நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உணவளிக்கும் போது முதலையின் வாயிலிருந்து விழுந்த ராட்சத பல் - இன்ஸ்டாவில் ஷேர் செய்த ராபர்ட் இர்வின்!

 ஒரு முதலை வாயிலிருந்து விழுந்த ஒரு பெரிய பல்லின் போட்டோவை போஸ்ட் செய்திருந்தார் ராபர்ட் இர்வின். அந்த பல்லின் அளவை பார்த்த பலரும் வியந்தனர்.


மறைந்த வனவிலங்கு நிபுணர் ஸ்டீவ் இர்வின் மகன் ராபர்ட் இர்வின். இவர் டிசம்பர் 1, 2003 அன்று பிறந்தார். மேலும் ராபர்ட் இர்வின் இயற்கை மற்றும் விலங்கு பாதுகாப்பு நிபுணர் பாப் இர்வினின் பேரன் ஆவார். ராபர்ட்டிற்கு பிண்டி என்ற சகோதரி இருக்கிறார்.


ராபர்ட்டுக்கு இரண்டு வயதாக இருந்த போது ஸ்டீவ் இர்வின் நீருக்கடியில் ஒரு ஆவணப்படத்தை படமாக்கும் போது ஏற்பட்ட காயத்தால் இறந்தார். தந்தை மறைந்தாலும் அவர் வழியில் வனவிலங்கு புகைப்படக் கலைஞராக உள்ளார் ராபர்ட் இர்வின். தவிர Australian children's television-ன் முக்கிய பர்சனாலிட்டிகளில் ஒருவராகவும் உள்ளார்.

மேலும் அவர் தனது குடும்ப மிருகக்காட்சி சாலையின் இன்டர்னல் டிவி நெட்வொர்க்கில் ராபர்ட்டின் ரியல் லைஃப் அட்வென்ச்சர் என்ற நிகழ்ச்சியையும் வழங்குகிறார். ராபர்ட் இர்வின் பெரும்பாலும் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவ்வப்போது சுவாரஸ்யமான போஸ்ட் மற்றும் தகவல்களை ஷேர் செய்வார்.

அந்த வகையில் அவரது சமீபத்திய போஸ்ட் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்குகியது. தனது இந்த இன்ஸ்டா போஸ்ட்டை ஆஸ்திரேலிய உயிரியல் பூங்காவிலிருந்து ஷேர் செய்து உள்ளார் வனவிலங்கு ஆர்வலரான ராபர்ட் இர்வின்.

ஒரு முதலை வாயிலிருந்து விழுந்த ஒரு பெரிய பல்லின் போட்டோவை போஸ்ட் செய்திருந்தார் ராபர்ட் இர்வின். அந்த பல்லின் அளவை பார்த்த பலரும் வியந்தனர். இது தொடர்பாக இரு போட்டோக்களை போஸ்ட் செய்துள்ள ராபர்ட், முதல் போஸ்ட்டில் கட்டை விரல் மற்றும் ஆட்காட்டி விரலால் அந்த மிகப்பெரிய பல்லை பிடித்து உள்ளார். இந்த போட்டோவிற்கு "இந்த பல்லின் அளவைப் பாருங்கள்.

இது யாருடையது என்பதைப் பார்க்க ஸ்வைப் செய்யவும் என்று குறிப்பிட்டுள்ளார். "முதல் போட்டோ ஒன்று பல்லை மிக அருகில் காட்டுகிறது, மற்றொன்று குறிப்பிட்ட பல் எந்த முதலையுடையதோ அதை காட்டுகிறது. இந்த பல் போஸ்கோவுக்கு சொந்தமானது என்று கூறி இருக்கிறார் ராபர்ட்.

மேலும் இந்த இன்ஸ்டா போஸ்ட்டில் "முதலைகளுக்கு இயற்கையாகவே தங்கள் வாழ்நாள் முழுவதும் பற்கள் விழுந்து இழந்து மீண்டும் வளர்க்கின்றன. போஸ்கோவிற்கு (முதலையின் பெயர்) உணவளிக்கும் போது பல் வெளியேறியதாக கூறி உள்ளார் ராபர்ட் இர்வின்.

முதலைகளுக்கு 6-க்கும் மேற்பட்ட பற்கள் இருக்கும் என்ற தகவலையும் பகிர்ந்துள்ளார் ராபர்ட். ராபர்ட் இர்வினை சோஷியல் மீடியாவில் ஃபாலோ செய்யும் பலர் போஸ்கோவின் வாயிலிருந்து விழுந்துள்ள மிக பெரிய பல்லின் படத்தைப் பார்த்து முற்றிலும் திகைத்து போய், தங்கள் எண்ணங்களை போஸ்ட்டின் கமெண்ட்ஸ் செக்ஷனில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

கடந்த 5 நாட்களுக்கு முன் இந்த போஸ்ட் ஷேர் செய்யப்பட்டதில் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்ஸ் மற்றும் ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ்களை பெற்றுள்ளது.


ALSO READ :

மூளையின் செயல்பாட்டை கண்காணிக்க ரூ.37 லட்ச மதிப்பிலான ஹெல்மெட் தயாரித்த அமெரிக்க நிறுவனம்


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்