🇨🇭#சர்க்கரை_நோயாளிகள்_ஏன் #3_மாதத்திற்கு_ஒருமுறை……
🇨🇭#கட்டாயம்_HbA1c_பரிசோதனை #செய்யணும்_தெரியுமா❓
🔯 தெருவுக்கு ஒரு……
சர்க்கரை நோயாளிகள் போக…
இப்ப வீட்டு ஒரு சர்க்கரை நோயாளிகள் இருக்கிறார்கள். இதை கருத்தில் கொண்டு நீரிழிவு குறித்த நமது அறிவை இன்னும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
🔯 நீரிழிவு நோய் குறித்து ஏராளமான கட்டுக்கதைகள் உள்ளன. அவற்றையெல்லாம், நீங்கள் புறக்கணிக்க வேண்டியது அவசியம்.
👉 நீரிழிவு நோயாளிகளுக்கு HbA1C
பரிசோதனையை மேற்கொள்வது மிக முக்கியமானது. இது இரத்த சர்க்கரை அளவுகள் வரம்பில் உள்ளதா என்பதைக் கண்டறிய உதவுகிறது. தேவைப்பட்டால் அவர்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளை சரிசெய்ய ஒரு மருத்துவருக்கும் இச்சோதனை உதவுகிறது. இந்த சோதனை ஆரோக்கியமான நபருக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா, இல்லையா என்பதை கண்டறியவும் உதவிடும்.
🔯 HbA1C சோதனை மற்றும் அது எவ்வாறு செய்யப்படுகிறது என்பதைப் பற்றி தற்போது தெரிந்து கொள்வோம்.
.
.
⭕ ஹெச்.பி.ஏ.1.சி. (HbA1C) என்றால் என்ன❓
சர்க்கரை நோயாளிகளுக்கு
இரத்த சர்க்கரை அளவை 2 அல்லது 3 மாத காலத்திற்கு ஒரு முறை கண்காணிக்க HbA1C சோதனை நடத்தப்படுகிறது.
👉 HbA1C என்பது கிளைகேட்டட் ஹீமோகுளோபினின் சுருக்கமாகும்.
⏩ HB = ஹீமோகுளோபின்
⏩ A1C = ஹீமோகுளோபின் வகை
.
.
🔯 Hba1c அளவுகள்❓
➡ 5.7க்குள் இருந்தால் நீரிழிவு இல்லை
➡ 5.7 முதல் 6.4 இருந்தால் நீரிழிவுக்கு முந்தைய நிலை (Pre diabetes)
➡ 6.4க்கு மேல் நீரிழிவு
➡ 7 க்குள் சிறந்த கட்டுப்பாடு.
( பல ஆய்வு முடிவுகள் கூறுவது யாதெனில் A1c 7க்குள் வைத்திருக்கும் மக்களுக்கு நீரிழிவால் ஏற்படும் சிறு நாள மற்றும் பெரு நாள பாதிப்புகள் வருவதில்லை என்பதே. எனவே நமது லட்சியம் A1cஐ ஏழுக்குள் வைத்திருப்பது என்பதாக இருத்தல் சிறந்தது.)
7 முதல் 8 உடனே நடவடிக்கை எடுத்து அதை குறைப்பது நல்லது
8 க்கு மேல் Hba1c இருப்பது
நீரிழிவு நமது உடலுக்குள் வேண்டாத பல மாற்றங்களை உருவாக்கி நாளடைவில் பல பிரச்சனைகள் தோன்றிட வழிவகுக்கும்.
🔯 பொதுவாக நீரிழிவு குறைபாடு இருப்பவர்களுக்கு காலை வெறும் வயிற்றில் ஒரு முறையும்………
பிறகு உணவு முடித்ததும் இரண்டு மணிநேரம் கழித்து ஒரு முறையும்……
ரத்த பரிசோதனை செய்வது வழக்கம். ஆனால் இந்த இரு ரத்த பரிசோதனைகளையும் நீரிழிவு குறைபாடு உள்ளவர் எளிதில் ஏமாற்றலாம்
❓👉#எப்படி……
மருத்துவரை சந்திக்கையில் மட்டும் ரத்த சர்க்கரை அளவுகள் குறைவாக வர வேண்டும் என்பது போன்ற மாணவ- ஆசிரியர் மனப்பான்மையுடன் மருத்துவரை சந்திக்கின்றனர்.
இந்த டெஸ்ட் எடுக்கும் நாளைக்கு முதல் நாள் இரவு மிகவும் குறைவாக உணவு உண்பது, பிறகு காலை உணவை குறைத்து உண்பது. அன்று மட்டும் தேனீருக்கு சர்க்கரை எடுக்காமல் இருப்பது போன்றவற்றை பல நீரிழிவு குறைபாடுள்ளவர்கள் செய்கிறார்கள்.
அவர்கள் ஏமாற்றுவது மருத்துவரை என்று எண்ணிக்கொள்கின்றனர் ஆனால் அவர்கள் அவர்களையே தான் ஏமாற்றிக்கொள்கின்றனர்.
இந்த பிரச்சனையை சரிகட்ட கண்டறியப்பட்டதே HbA1C எனும் பரிசோதனை
👉#இதன்_அடிப்படை_என்ன❓❓
நமது ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் 90- 120 நாட்கள் வாழக் கூடியவை.
அதாவது ஒருமுறை தோற்றுவிக்கப்பட்டதில் இருந்து அழியும் வரை 3 -4 மாதங்கள் இருக்கும்.
இதில் ஹீமோகுளோபின் எனும் புரதம் கலந்திருப்பது அனைவரும் அறிந்ததே. இந்த ஹீமோகுளோபின் தான் ஒருவருக்கு ரத்த சோகை இருக்கிறதா இல்லையா என்பதை அளவிட பயன்படுகிறது.
இந்த ஹீமோகுளோபின் நமது இதயம் மற்றும் நுரையீரலில் இருந்து ஆக்சிஜனை மூளை மற்றும் பல உறுப்புகளுக்கும் கொண்டு செல்கிறது.
இந்த ஹீமோகுளோபினில் ஒரு பகுதி - நமது ரத்தத்தில் உள்ள க்ளூகோசைக் கொண்டு உற்பத்தி செய்யப்படுகிறது
இதை glycosylated HEMOGLOBIN என்று அழைக்கப்படுகிறது.
இந்த HbA1C ஐ கணக்கிடுவது மூலம் கடந்த மூன்று மாதங்கள் ஒருவரின் ரத்தத்தில் சர்க்கரை அளவுகள் எப்படி இருந்தன❓என்பதை அறிய முடிகிறது.
இந்த மூன்று மாத காலத்தில் அவர் எவ்வளவு சிறப்பாக உணவு முறை கட்டுப்பாட்டைக் கடைபிடித்தார் என்பதையும் அறிய முடியும்
ஆகவே நீரிழிவு குறைபாடு இருப்பவர்கள் வருடம் மூன்று முறை HbA1C ஐ சோதனை செய்து பார்ப்பது நல்லது.
HbA1c பரிசோதனை செய்ய வெறும் வயிற்றில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு நாளின் எந்தப்பகுதியிலும் கொடுக்கலாம்.
ஒருவருக்கு நீரிழிவு இருக்கிறதா இல்லையா என்பதை அறியும் இது பயன்படுகிறது.
🈵 ஹெச்.பி.ஏ.1.சி. எவ்வளவு காலம் நீடிக்கும்❓
ஹீமோகுளோபின் என்பது சிவப்பு இரத்த அணுக்களில் காணப்படும் ஒரு புரதமாகும். உங்கள் இரத்தத்திற்கு சிவப்பு நிறத்தை கொடுப்பது இந்த இரத்த அணுக்கள் தான். ஹீமோகுளோபினின் வாழ்நாள் 3-4 மாதங்கள் வரை தான் நீடிக்கும். அதன் பின்னர் அவை முற்றிலுமாக புதுப்பிக்கப்படும். ஹெச்.பி.ஏ.1.சி. சோதனையானது, கடந்த 3-4 மாதங்களில் சராசரி இரத்த குளுக்கோஸ் அளவை தான் அளவிடுகிறது.
⭕ நீரிழிவு நோயாளிக்கு எச்.பி.ஏ.1.சி. ஏன் கண்காணிக்கப்பட வேண்டும்❓
▶ஏற்கனவே கூறியது போல, ஹீமோகுளோபினுடன் இணைக்கப்பட்ட இரத்த சர்க்கரையை, கிளைகேட்டட் ஹீமோகுளோபினின் செறிவை ஹெச்.பி.ஏ.1.சி. மூலம் அளவிடலாம். எனவே, இது நீரிழிவு நிலையை கண்காணிக்க உதவும், ஒரு குறிப்பு அளவுருவாகவே இந்த ஹெச்.பி.ஏ.1.சி. கருதப்படுகிறது.
▶சராசரி அளவை கண்டறிய குளுக்கோஸ் அளவுகளில் உள்ள அனைத்து ஏற்ற இறக்கங்களையும் பதிவு செய்வதற்கு இந்த ஹெச்.பி.ஏ.1.சி. உதவுகிறது.
▶ நீரிழிவு சிக்கல்களை உருவாக்கும் அபாயத்தை பகுப்பாய்வு செய்யவும்.
▶ஒவ்வொரு நீரிழிவு நோயாளியும்
3 அல்லது 4 மாதங்களுக்கு ஒருமுறை, இரத்த சர்க்கரை அளவுகளுக்கு இணங்க ஹெச்.பி.ஏ.1.சி. பரிசோதனையை செய்து, அதிகரித்த அளவிற்கு காரணமாக இருக்கக்கூடிய சிக்கல்களைத் தடுத்திடவும். தேவைப்பட்டால், அளவைக் குறைப்பதற்கான உதவிக்குறிப்புகளுக்கு மருத்துவரையும் கூட அணுகிடலாம். ஆனால். நீரிழிவு நோயாளிகள் தவறாமல் ஹெச்.பி.ஏ.1.சி. பரிசோதனை மேற்கொள்ள மட்டும் தவறாதீர்கள்.❗
🉐 இந்த சோதனையை நடத்தும் போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை……❓
* நோயாளியின் வயது
* அவர்களுக்கு இருக்கும் நீரிழிவு நோயின் வகை
* அவர்கள் பின்பற்றும் சிகிச்சை (மருந்து, இன்சுலின் போன்றவை)
* அவற்றின் நிலை தொடர்பான சிக்கல்கள்.
Comments
Post a Comment