உலகில் முதல் முறையாக.... ; 2021ம் ஆண்டு வியப்பில் ஆழ்த்திய ‘5’ சம்பவங்கள்.......
- Get link
- X
- Other Apps
2021 ஆம் ஆண்டில், மனித வரலாற்றைப் பாதித்த பல நிகழ்வுகள் நடந்த போதிலும், மனித வரலாற்றில் முதன்முறையாக ந்ன்ற வகையில் மனிதர்களை வியப்பில் ஆழ்த்திய சில சம்பவங்களும் நிகழ்ந்தன. மனித வரலாற்றில் முதன்முறையாக 2021 ஆம் ஆண்டு நடந்த 5 முக்கிய நிகழ்வுகள் இதோ உங்களுக்காக.....
மனித வரலாற்றில் முதன்முறையாக நாசாவின் விண்கலம் சூரியனின் வளிமண்டலத்தைத் தொட்டது. நாசாவின் பார்க்கர் சோலார் ப்ரோப் (Parker Solar Probe) சூரியனின் மேல் வளிமண்டலம், அங்குள்ள துகள்கள் மற்றும் காந்தப்புலங்கள் வழியாக சென்றது. பார்க்கர் சோலார் ப்ரோப், சூரிய அறிவியலுக்கான ஒரு மைல்கல் எனலாம்.
2021 நவம்பர் 19 அன்று, அமெரிக்காவில் முதல் முறையாக ஒரு பெண், துணை அதிபரானார். அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் கமலா ஹாரிஸ் அமெரிக்க பெண் துணை என்பதோடு, முதல் கருப்பின பெண் துணைஅதிபர் மற்றும் முதல் தெற்காசிய பெண் துணை அதிபர் ஆவார்.
மனித வரலாற்றில் முதன்முறையாக, விண்வெளி சுற்றுலா சாத்தியாமாகியுள்ளது,. இனி சாமனியரும் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ளலாம். விர்ஜின் கேலக்டிக் நிறுவனரும் கோடீஸ்வரருமான ரிச்சர்ட் பிரான்சன் விண்வெளிக்குச் செல்லும் போட்டியில் வெற்றி பெற்றார். அவர் தனது நிறுவனம் உருவாக்கிய supersonic Space Ship Two என்ற விண்கலத்தில் ஜூலை மாதம் விண்வெளிக்குச் சென்றார். 9 நாட்களுக்குப் பிறகு, அமேசான் மற்றும் ப்ளூ ஆரிஜின் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos) தனது சொந்த ராக்கெட்டில் விண்வெளிக்குச் சென்றார்.
உலகில் முதன்முறையாக El Salvador நாடு பிட்காயினை சட்டப்பூர்வ நாணயமாக அறிவித்தது. மத்திய அமெரிக்க நாடான El Salvador செப்டம்பர் மாதம் பிட்காயினை அமெரிக்க டாலருடன் சட்டப்பூர்வ நாணயமாக அறிவிக்கும் சட்டத்தை இயற்றியது. இந்த நடவடிக்கை நாட்டு மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிரிப்டோகரன்சிகள் எல் சால்வடாரில் மேலும் பொருளாதார உறுதியற்ற தன்மைக்கு வழிவகுக்கும் என்றும் பணமோசடியை ஊக்குவிக்கும் என்று நிதி நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மனித மூளை முதன்முதலில் கணினியுடன் இணைக்கப்பட்டது. பிரவுன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மனித மூளையை டிரான்ஸ்மிட்டர் கருவி மூலம் கணினியுடன் முழுமையாக இணைத்தனர். இந்த சோதனையில், செயலிழந்த ஒரு நபர் ரோபோ கைகால்கள் உதவியுடன் நடந்தார்.
ALSO READ : உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு நீதிபதியை உருவாக்கியுள்ளது சீனா..!!
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment