இன்ஸ்டாகிராம் பதிவுகளை மறைக்க சுலப வழிகள்! பதிவை அழிக்க வேண்டாம்!
- Get link
- X
- Other Apps
இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் பதிவுகள் இடுவது சுலபம். ஆனால் அதை மறைப்பது கடினம். போட்ட பதிவுகளை நீக்காமல், அது பிறருக்குத் தெரியாமல் மறைப்பது எளிதானதே...
இன்ஸ்டாகிராம் இணையத்தின் மிகவும் பிரபலமான சமூக வலைப்பின்னல் பயன்பாடுகளில் ஒன்றாகும். பயனர்கள் தங்கள் கணக்குகளில் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களைப் பகிர்கின்றனர். ரீல்ஸ், ரீல்ஸ் ரீமிக்ஸ், லிங்க் ஸ்டிக்கர்கள் என பல புதிய அம்சங்களை இன்ஸ்டாகிராம் தொடர்ந்து அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது.
இருப்பினும், உங்கள் சுயவிவரத்திலிருந்து சில இடுகைகளை அனைவரும் பார்க்க வேண்டாம் என விரும்பலாம். அவை நீக்க முடியாத அளவுக்கு சிறந்தவையாக இருக்கும் போது, பதிவை நீக்குவதற்கும் தயக்கம் இருக்கும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், உங்கள் Instagram கணக்கில் இருந்து பதிவுகளை நீக்காமல் மறைக்க அனுமதிக்கிறது இன்ஸ்டாகிராம் காப்பகம்.
இதனால், உங்கள் காப்பகத்தில் அந்த குறிப்பிட்ட பதிவு இருக்கும், அதை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். காப்பகப்படுத்தப்பட்ட பதிவையும் தேர்வுசெய்து, எப்போது வேண்டுமானாலும் அனைவரின் பார்வைக்காகவும் பொதுவில் பதிவிடலாம்.
உங்கள் இன்ஸ்டா பதிவுகளை எப்பது காப்பகப்படுத்துவது, மதிப்பாய்வு செய்வது மற்றும் இன்ஸ்டாகிராமில் நேரலை செய்வது எப்படி என்று தெரிந்துக் கொள்ளவும்...
உங்கள் ஸ்மார்ட்போனில், இன்ஸ்டாகிராம் செயலியை திறந்து, நீங்கள் சேமிக்க விரும்பும் பதிவை கிளிக் செய்யவும்
இடுகையின் மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகள் கொண்ட ஐகானை கிளிக் செய்யவும்
"Archive" என்ற தெரிவை தேர்வு செய்யவும்
மேல் இடது மூலையில் உள்ள கதைகள் காப்பகம், இடுகைகள் காப்பகம் அல்லது நேரலைக் காப்பக கீழ்தோன்றும் மெனுக்களில் இருந்து உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்யவும்.
பின்னர், மேல் வலது மூலையில், குறிப்பிட்ட இடுகையை அணுக புள்ளிகள் ஐகானைத் தொடவும்.
அதன் பிறகு, உங்களுக்கு இரண்டு தேர்வுகள் இருக்கும்
அவை, நீக்கவும், மற்றும் பின்னர் சுயவிவரத்தில் காண்பிக்கவும் (Delete and display on profile)
நீங்கள் தேர்ந்தெடுத்த விருப்பத்தைத் தேர்வு செய்து தொடரலாம். New Year, New You போன்று புத்தாண்டுக்கான இன்ஸ்டாகிராம் சுயவிவரத்தை மாற்ற விரும்பும் அனைவருக்கும் இது ஒரு சிறந்த கருவியாகும்!
ALSO READ : ரகசிய கேமராவை கண்டறிவது எப்படி?
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment