நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தூக்கமும் அழகு தரும்......

 இரவில் நன்றாக தூங்காவிட்டால் முகத்தில் அதன் தாக்கம் வெளிப்படும். கண்கள் சோர்ந்து போய் காட்சியளிக்கும். சிலர் படுத்ததும் சில நிமிடங்களிலேயே தூங்கி விடுவார்கள். சிலருக்கு அங்கும் இங்கும் புரண்டு படுத்தாலும் தூக்கம் உடனே கண்களை தழுவாது. ஒருகட்டத்தில் கண்களோடு போராடி அவர்களை அறியாமலேயே தூங்கிப்போய்விடுவார்கள். உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்வு கொடுப்பதற்கு தூக்கத்தை விட சிறந்த மருந்து எதுவுமில்லை.


கை நிறைய பணம் இருந்து என்ன பயன்? நன்றாக தூங்கி எழ முடியவில்லையே?’ என்று சிலர் புலம்புவதுண்டு. அதில் இருந்தே வாழ்நாளில் தூக்கம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறிந்து கொள்ளலாம். ஒரு நாளில் மூன்றில் ஒரு பகுதியை தூக்கத்திற்காக செலவிடு கிறோம். ஒருவர் தன் வாழ்நாளில் 26 ஆண்டுகளை தூக்கத்திற்காக செலவிடுகிறார்.

உடல் வளர்ச்சி அடைவதற்கும், மூளை புதுப்பித்துக் கொள்வதற்கும் அவகாசம் தருவது தூக்கம் தான்.

பிறந்த குழந்தை தினமும் சுமார் 18 மணி நேரம் தூங்க வேண்டும். 3 முதல் 5 வயது வரையிலான குழந்தைகள் 11 மணி நேரம் தூங்கியாக வேண்டும். வயது அதிகரிக்க அதிகரிக்க தூங்கும் நேரம் குறைகிறது. மூளைக்கு தேவை இல்லாத விஷயங்களையும் யோசிக்க இடம் கொடுப்பது தான் அதற்கு காரணம்.

சிலர் பணம் பணம் என்று ஓடோடி உழைத்தே தூக்கத்தை தொலைத்து விடுகிறார்கள். 8 மணி நேரம் தூங்க வேண்டும் என்ற சராசரி அளவை அவசியம் பின்பற்றியாக வேண்டும். சிலர் கடும் உழைப்பின் காரணமாக 6-7 மணி நேரம் தான் தூங்குகிறார்கள். அந்த தூக்கம் கூட வராமல் தவிப்பவர்களும் உண்டு.

தூக்கத்தை ‘ரெம்’ (REM) மற்றும் ‘நான் ரெம்’ (NON-PEM) என இரு வகையாக பிரிக்கலாம். ‘ரெம்’ தூக்கத்தின்போது வரும் கனவுகள் நன்றாக ஞாபகத்தில் இருக்கும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், ‘ரெம்’ தூக்கத்தின்போது கனவுகளும் அதிகம் தோன்றும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

எப்போதும் சுறுசுறுப்பாக உள்ளவர் களுக்கு தான் இந்த ரெம் வகை தூக்கம் அதிக நேரம் நீடிக்கும். கனவுகளும் அதிகமாக வரும். மந்த புத்தி உள்ளவர் களுக்கு இவ்வகை தூக்கம் குறைவு தானாம். அதனால் கனவுகளும் குறைவாகத் தான் வரும்.

தூக்கம் என்பது இயற்கையானது. என்ன தான் தூக்கம் வராமல் இழுத்துப் பிடித்துக் கொண்டு இருந்தாலும், ஏதாவது ஒரு கட்டத்தில் கண்டிப்பாக தூக்கம் வந்தே தீரும். ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் தூங்காமல் இருப்பதற்கு முயற்சி செய்யலாம். அதையும் தாண்டினால், தூக்கம் உங்களை அறியாமலேயே தானே வந்து விடும். இது இயற்கையானது. இதை மாற்ற முடியாது என்பது ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.

தூக்கம் எல்லோருக்கும் பொதுவாக இருந்தாலும் பெண்கள் தான் அழகாக தூங்குகிறார்கள் என்று ஆய்வில் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அவர்களின் மென்மையான அணுகுமுறை தான் அதற்கு காரணம் என்றும் சொல்கிறார்கள். அதேவேளையில் மென்மையாக நடந்து கொள்ளாமல் சற்று ஆண் தன்மையுடன் நடந்து கொள்ளும் பெண்களுக்கு இந்த அழகான தூக்கம் கிடைப் பதில்லை. ஆண்களிலும் மென்மையான அணுகுமுறை கொண்டவர்கள் தான் அழகாக தூங்கு கிறார்கள்.

அலைபாயும் மனம் கொண்டவர்கள், எப்போதும் எதையாவது சிந்தித்துக் கொண்டிருப்பவர்கள் தூக்கம் வராமல் தவிப்பார்கள். ஆழ்ந்த, அழகான தூக்கம் என்பது பெண்களுக்குத்தான் சாத்தியமானது என்பதும் ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்