ரேஸ் டிராக்கில் காற்றில் பறந்த கார்! மயிர் கூச்செறியும் கார் பந்தய வீடியோ!
- Get link
- X
- Other Apps
கார் பந்தயத்தை படம் எடுத்துக் கொண்டிருந்த பெண், இந்த எதிர்பாராத விபத்தையும் பதிவு செய்தார். இந்த விபத்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
- ரேஸ் டிராக்கில் காற்றில் பறந்த கார்
- பந்தயப் பாதையில் கார்கள் மோதல்
- வீடியோ எடுத்தப் பெண் மயிரிழையில் உயிர் பிழைத்தார்
இந்த கார் பந்தய வீடியோ ஆஸ்திரேலியாவில் எடுத்ததாக சொல்லப்படுகிறது. இரண்டு கார்கள் பயங்கரமாக மோதுகின்றன. ரேஸ் டிராக்கில் நடைபெற்ற இந்த விபத்தின் போது, கார்களின் வேகம் அதிகமாக இருந்ததால், வேலியில் கார் மோதியது. இங்கு நின்று கொண்டு அந்த பெண் கார் பந்தயத்தை வீடியோ எடுக்கிறார். அந்தப் பெண்ணுக்கு மிக அருகில் கார் விழுந்து இரும்பு வேலியில் மோதியதை வீடியோவில் தெளிவாகக் காணலாம்.
வீடியோவைப் பார்க்கும்போது, இந்த மோதலில் பந்தய வீரருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. இருப்பினும், ஓட்டுநரின் பாதுகாப்புக் கவசங்களால் அவருக்கு அதிக காயம் ஏற்படவில்லை.
ஸ்பீட்கேஃப் டிவி என்ற யூடியூப் சேனலில் இந்த விபத்து வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது. பறக்கும் போது கார் தன்னிடம் வந்ததாக வீடியோ பதிவு செய்துக் கொண்டிருந்த பெண் கூறியுள்ளார். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அதில் யாரும் உயிரிழக்கவில்லை என்பது ஆறுதல் தரும் செய்தி...
also read :சீனாவின் ஷாங்காய் நகரில் உலகின் மிக நீள மெட்ரோ ரெயில் பாதை திறப்பு
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment