நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Belly Fat: தொப்பை வேகமாக குறைய ‘3’ எளிய பயிற்சிகள்- டயட் பிளான் ..!!

 தொப்பையைக் குறைக்க உதவும் மூன்று எளிய பயிற்சிகளைப் பற்றியும் டயட் பிளான்  பற்றியும் அறிந்து கொள்ளலாம்.


மது வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் காரணமாக, உடல் பருமன், தொப்பை என்பது கிட்டதட்ட அனைவரும் சந்திக்கு பிரச்சனையாக ஆகி விட்டது. பொதுவாக,  உடலில் அதிக கொழுப்பு வயிறு மற்றும் இடுப்பில் படிந்து, தோற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நீங்கள் அதிக உடல் பருமன் மற்றும் தொப்பை உள்ளவர் என்றால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயன்படும். ஆரோக்கியமான உணவு மற்றும் சில உடற்பயிற்சிகளின் உதவியுடன், சில நாட்களிலேயே தொப்பை கொழுப்பை கரைக்கலாம். அவர்களை பற்றி கீழே தெரிந்து கொள்ளுங்கள்...

தொப்பையை கரைக்கும் டயட் பிளான்

1. புரதம் நிறைந்த உணவுகள்

உணவு நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங் உடல் பருமனை குறைக்கும் டயட் பிளான் குறித்து கூறுகையில், சோயாபீன்ஸ், டோஃபு, நட்ஸ் போன்ற புரதம் அதிகம் இருக்கும் உணவுகளை டயட்டில் சேர்க்க வேண்டும் என்கிறார். புரதம் நிறைந்த  உணவை உண்பதன் மூலம், பசியை கட்டுப்படுத்தலாம்  என்பதோடு, எடுத்துக் கொள்ளும் கலோரிகளும் மிக குறைவாக இருக்கும்.

2. சர்க்கரை உணவை குறைக்கவும்

சர்க்கரையில் பிரக்டோஸ் இருப்பதால் வயிற்றைச் சுற்றி  சேரும் கொழுப்பை அதிகப்படுத்துவதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். குளிர் பானங்கள், செயற்கையாக சுவையூட்டப்பட்ட பழச்சாறுகள் மற்றும் இனிப்பு பானங்கள் உடல் பருமன் அபாயத்தை 60% அதிகரிக்கின்றன. எனவே அவற்றை உட்கொள்வதை தவிர்க்கவும்.

3. உணவில் கார்போஹைட்ரேட்டின் அளவைக் குறைக்கவும்

வெள்ளை சர்க்கரை, வெள்ளை ரொட்டி, பாஸ்தா, மைதா போன்ற பொருட்கள் கொழுப்பை அதிகரிக்கும். எனவே அவற்றை உட்கொள்ள வேண்டாம். இவ்வாறு செய்வது தொப்பையை குறைக்க பெரிதும் உதவுகிறது. மாறாக பச்சைக் காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள்.

4. ஆரோக்கியமான காலை உணவை உண்ணுங்கள்

காலை உணவைத் தவிர்க்கும்போது பசி அதிகமாகி, பின்னர் நம்மை அறியாமல் அதிகம் சாப்பிடுவதால், உடல் எடை கூடுகிறது என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். காலை உணவில் ஓட்ஸ், அதிக புரோட்டீன் பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். இது தொப்பையை குறைக்க உதவும்.

5. நார்ச்சத்து நிறைந்த உணவுகளை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்

பருப்பு வகைகள், முழு தானியங்கள், பட்டாணி, முட்டைக்கோஸ், பீன்ஸ் போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதனால், செரிமானம் மேம்படுவதோடு வயிற்றில் கொழுப்பு சேராது. அவற்றை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

தொப்பையை குறைக்க மூன்று சிறந்த பயிற்சிகள்

1. இரு கால்களையும் நீட்டி செய்யும் பயிற்சி

முதலில், சாதாரண நிலையில் படுத்துக் கொண்டு, இரண்டு கால்களையும் உயர்த்தவும்.
இப்போது இரண்டு கால்களையும் முழங்கால்களில் ஒன்றாக மடக்கவும்.
பின்னர் 5 விநாடிகள் கைகளால் கால்களை பிடித்துக் கொள்ளுங்கள்.
பின், கால்களை  நேராக்குங்கள்.
இதை 10-12 முறை செய்யவும்.

2. கத்தரிக்கோல் பயிற்சி

சாதாரண நிலையில் படுத்துக் கொண்டு, இரண்டு கால்களையும் உயர்த்தவும்.
மெதுவாக வலது காலை கீழே கொண்டு வரவும்.
பின்னர் இடது காலை கீழே கொண்டு வரும்போது, ​​வலது காலை உயர்த்தவும்.
இதை 10-12 முறை செய்யவும்.

3. பிளாங்க் (Plank)

முதலில் உங்கள் வயிறு தரையில் படுமாறு குப்புற படுத்துக் கொள்ளுங்கள்
இப்போது கால்விரல்கள் மற்றும் கைகஐ ஊன்றிக் கொண்டு உடலை உயர்த்தவும்.
இந்த நேரத்தில், உங்கள் உடலை இறுக்கமாக வைத்திருங்கள்.
இந்த நிலையில் 10 விநாடிகள் இருக்கவும்.
இதை 4-5 முறை செய்யவும்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!