நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உலகின் முதல் இரட்டை பயன்பாட்டு வாகனம் - ஜப்பானில் அறிமுகம்

சாலைகளிலும், ரயில் பாதைகளிலும் ஓடக்கூடிய இரட்டை பயன்பாட்டு வாகனம் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எலக்டரானிக் சாதனங்கள், நவீன தொழில்நுட்ப கருவிகள் ஆகியவற்றில் புதுமைகளை புகுத்துவதில் ஜப்பான் எப்போதும் முன்னோடியாக திகழ்கிறது. அந்த வகையில் அந்நாட்டில் தற்போது உலகின் முதல் இரட்டை பயன்பாட்டு வாகனம் DMV (Dual Mode Vehicle) உருவாக்கப்பட்டுள்ளது. 

சாலையிலும், ரெயில் பாதைகளிலும் இயங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இரட்டை பயன்பாட்டு வாகனம் ஒரு மினிபஸ் போல தோற்றமளிக்கிறது. சாலையில் செல்லும் போது இந்த வாகனம் ரப்பர் டயர்களில் இயங்குகிறது. அதே போல அதன் அடிப்பகுதியில் இருக்கும் எஃகு சக்கரங்கள் மூலம் ரெயில் பாதையில் இறங்கி, ஒரு ரயில் பெட்டியாகவும் செயல்படுகிறது. 

இந்த இரட்டை பயன்பாட்டு வாகனம் 21 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடியது. ரெயில் பாதைகளில் மணிக்கு 60 கி.மீ வேகத்திலும், சாலைகளில் மணிக்கு 100 கி.மீ வேகத்திலும் இயங்கும் என்று ஆசா கோஸ்ட் ரெயில்வே நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆசா கோஸ்ட் ரெயில்வே நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறுகையில், “ஜப்பானில் குறைந்த மக்கள்தொகை கொண்ட கையோ பொன்ற சிறிய நகரங்களுக்கு இந்த வாகனங்கள் உதவக்கூடும். இந்த இரட்டை பயன்பாட்டு வாகனம் (DMV) உள்ளூர் மக்களுக்கு பேருந்தாகவும், ரயிலாகவும் பயன்படும். அதே சமயம் சுற்றுலாவை மேம்படுத்தவும் இது உதவும்” என்று தலைமை நிர்வாக அதிகாரி ஷிகேகி மியுரா கூறினார். 



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!