நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பரோட்டாவை இப்படி செய்து சாப்பிட்டால் உடல் எடை கிடுகிடுவென குறையுமா?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் பரோட்டாவில் ஏகப்பட்ட கெடுதல் இருந்தாலும் பலரும் அதை விரும்பி தான் சாப்பிடுகின்றனர்.

ஆனால், உடல் நலத்துக்கு பாதிப்பு ஏற்படாமல் வீட்டிலேயே விதவிதமான சுவையான பரோட்டா வகைகளை செய்யலாம். வீட்டில் சமைக்கப்படும் பரோட்டா ஆரோக்கியமான எடை குறைக்கும் உணவாகவும் மாற்றலாம்.

இதில், பலராலும் பெரிதும் விரும்பப்படாத முள்ளங்கியில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் உள்ளன. கேல்சியம் மற்றும் வைட்டமின் அதிகம் உள்ள முள்ளங்கி நீரிழிவு, அதிக கொலஸ்டிரால் மற்றும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு எடை குறைக்க முள்ளங்கி பரோட்டா உதவுகிறது.

வழக்கமாக பரோட்டா செய்யும் மாவில், முள்ளங்கியைத் துருவி சேர்த்து செய்தால், சுவையாக இருப்பதோடு ஆரோக்கியமாகவும் இருக்கும். அடுத்ததாக வெங்காய பரோட்டா செய்ய சிறுசிறு துண்டுகளாக நறுக்கிய வெங்காயத்தை பரோட்டா மாவில் சேர்த்து சமைப்பது பரோட்டாவின் சுவையை அதிகரித்து, ஆரோக்கிய நன்மைகளையும் கொடுக்கும்.

வெங்காயத்தில் கலோரிகள் குறைவு, மினரல்கள் நிறைந்துள்ளது மற்றும் நார்ச்சத்தும் அதிகம். எனவே, நீண்ட நேரத்துக்கு பசிக்காது மற்றும் பரோட்டா சாப்பிட்டால் செரிமானம் ஆகாது என்ற பிரச்சனையும் இருக்காது.

வெந்தயக் கீரை பரோட்டாவை பல விதங்களில் சமைக்கலாம். கீரையை அப்படியே பச்சையாகவும் அல்லது வேக வைத்தும் பரோட்டா மாவில் சேர்த்து செய்யலாம்.

மேலும் கீரையை அரைத்து, அதனை மாவில் கலந்து பச்சை நிறத்தில் பரோட்டாவை செய்யலாம்.வெந்தயக் கீரையை வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கி, அந்தக் கலவையை பரோட்டா ஸ்டஃப்பிங் ஆகப் பயன்படுத்தலாம். 



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்