நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Molnupiravir: கொரோனா மருந்தை எங்கே வாங்கலாம்; விலை என்ன..!!!

 சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட கொரோனா மருந்தான மோல்னுபிராவிர் என்ற மாத்திரையின் விலை, சந்தையில் பெறுவது எப்படி என்பதை அறிந்து கொள்ளலாம்.


கொரோனா வைரஸுக்கு எதிரான மருந்தான் மோல்னுபிராவிர் இன்று முதல் இந்திய சில்லறை மருந்து சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மருந்தின் பயன்பாட்டிற்கு அரசாங்கம் சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது அனைவரும் அறிந்ததே.

மருந்தின் விலை

இந்த மருந்தின் விலையைப் பற்றி கூறுகையில், மருந்துக் கடையில் மோல்னுபிரவீர் கேப்ஸ்யூல் ஒன்று, 63 ரூபாய்க்கு  கிடைக்கும். ஆனால், மருத்துவரின் பரிந்துரைச் சீட்டின் அடிப்படையில் மட்டுமே மருந்தை விற்பனை செய்ய முடியும் என்று மருந்து கடைகளுக்கு தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

மோல்னுபிரவீர் மருந்துக்கு அனுமதி கிடைத்தது

மத்திய மருந்துகள் தரநிலைக் கட்டுப்பாட்டு அமைப்பின் (CDSCO) நிபுணர் குழு சமீபத்தில் அவசரகாலச் சூழ்நிலைகளில் கொவிட் மருந்தான மோல்னுபிராவிர் மாத்திரையை  சிகிச்சைக்கு உபயோகிக்க பரிந்துரைத்தது.

மருந்துகள் நிபந்தனைகளுடன் விற்கப்படும்

கோவிட்-19 அவசரநிலை மற்றும் மருத்துவத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, நாட்டில் அவசரகாலச் சூழ்நிலைகளில் மோல்னுபிராவிர் மருந்தின் உற்பத்தி மற்றும் விற்பனையை, கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்க நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. இந்த மருந்தை 'SPO2' 93 சதவிகிதம் உள்ள வயது முதிர்ந்த நோயாளிகளுக்கும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல் மற்றும் இறப்பு போன்ற நோய் அபாயத்தில் உள்ள நோயாளிகளுக்கும் பயன்படுத்தலாம். ஆனால் இந்த மருந்தை கடைகளில், மருத்துவர்களின் பரிந்துரையீஇல், மருந்து சீட்டின் அடிப்படையில் மட்டுமே விற்க வேண்டும். இந்த மருந்தை 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொடுக்க கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

மருந்தின் செயல் திறன்

மருந்தின் செயல் திறன் குறித்த அறிக்கையை வெளியிட்ட நிறுவனம், நாடு முழுவதும் 29 நகரங்களில் 1,218 நோயாளிகளுக்கு மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான D. ஸ்ரீநிவாஸ் ரெட்டி கூறுகையில், சோதனை முடிவுகளின் படி, 5 நாட்கள் சிகிச்சை காலத்தில் கொரோனா பாதித்த நோயாளியின் வைரஸ் பாதிப்பை குறைப்பதில் மோல்னுபிராவிர் பயனுள்ளதாக இருந்தது என்றார்.


also read : விமான கழிவறையில் தனிமைப்படுத்திக்கொண்ட பெண்! ஆச்சரியமூட்டும் கோவிட் சம்பவம்.....

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்