நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இரவு தூங்கும் முன் ஒரே ஒரு பூண்டு பல்லை கழிவறையில் தூக்கி போடுங்க... அடுத்த நாள் காத்திருக்கு ஆச்சரியம்!

பூண்டு சமையலைத் தவிர பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க கூடிய அதி சக்திவாய்ந்த உணவு பொருள்.

ப்படிப்பட்ட பூண்டு கழிவறையில் ஒரு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

இப்போது ஒரு பல் பூண்டு கொண்டு கழிவறையை எப்படி சுத்தம் செய்வதென்பதைக் காண்போம்.  

பூண்டை எப்படி சுத்தம் செய்ய பயன்படுத்துவது?
கழிவறையை சுத்தம் செய்ய பூண்டு பல்லை இரண்டு வழிகளில் பயன்படுத்தலாம்.

இரவு தூங்கும் முன் ஒரு பல் பூண்டை நன்கு தட்டி கழிவறையில் போட்டு, இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் எழுந்ததும் நன்கு தேய்த்து கழுவினால் கழிவறையில் உள்ள கிருமிகள் அழிந்துவிடும்.

  நீரானது நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் பூண்டுகளை பொடியாக நறுக்கிப் போட்டு நன்கு கொதிக்கும் போது அடுப்பை அணைத்து, 15 நிமிடம் மூடி வைக்க வேண்டும். அதன் பின் அந்நீரை வடிகட்டி, அதை இரவு தூங்கும் முன் கழிவறையில் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் தேய்த்து கழுவ வேண்டும்.
கழிவறை சுத்தமாக துர்நாற்றமின்றியும், பாக்டீரியாக்கள் இல்லாமலும், கறை ஏதும் இல்லாமலும் இருக்க வேண்டுமானால் இந்த வழிகளை வாரத்திற்கு இரண்டு முறை மேற்கொள்ளுங்கள்.

இதனால் கழிவறையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள்.  



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்