நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஒரே மாதத்தில் 20 கிலோ எடை குறைத்த ரகசியம்! நடிகை அனுஷ்காவின் டயட் டிப்ஸ் இதோ!

 தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா. அவர் குண்டான பெண்களுக்கு வரும் பிரச்சனைகளைப் பற்றி பேசும் ஸீரோ சைஸ் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதற்காக தன் எடையிலிருந்து கூடுதலாக 20 கிலோ வரை எடை கூடினார்.

அதன் பிறகு அந்த எடையை குறைக்க மிகக் கடுமையாக போராடினார். அப்படி அவர் குறைத்த தன் எடையை சீராக வைத்துக்கொள்ள அவர் பின்பற்றிக்கொண்டிருக்கும் சில டயட் டிப்ஸ் குறித்து விரிவாக பார்க்கலாம்..


  • மூன்று வேளைக்கு கொஞ்சமாக சாப்பிட்டால் இடையில் பசி எடுக்க ஆரம்பிக்கும். அதோடு எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும். எனவே அவருடைய உணவு முறையை 5 வேளையாக வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுவாராம்.
      • எப்போதும் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தும் அனுஷ்கா தன்னை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்வதில் கவனமாக இருப்பார். எனவே தான் அவரின் சருமம் எப்போதும் மின்னுகிறது. தண்ணீர் குடிப்பது மட்டுமன்றி ஷூட்டிங் இடையில் இளநீரும் குடிப்பார்.

      • எப்போதும் தன் உணவில் பச்சைக் காய்கறிகளை தவறியதில்லை அனுஷ்கா. தினமும் ஏதாவதொரு பச்சை வகை காய்கறிகளை எடுத்துக்கொள்வார். அதுதான் அவருடைய உணவின் பாதியாக இருக்கும்.

      • எந்த வேலையாக இருந்தாலும் இரவு 8 மணிக்கு முன்பே சாப்பிட்டு விடுவாராம். இது அவருடைய செரிமானத்தை மிக வேகமாக தூண்டும். மெட்டாபாலிசம் அதிகரிக்கும். இதனால் தேவையற்ற கொழுப்பு சேர்ந்து உடல் எடை அதிகரிக்காது.


      • உணவு வகைகளில் மட்டும் கவனம் செலுத்தாலும் தினசரி யோகா அல்லது உடற்பயிற்சியையும் சரியாக செய்துவிடுவாராம் அனுஷ்கா. அதுதான் தன்னை நாள் முழுவதும் ஆக்டிவாக வைத்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.




      Comments

      Popular posts from this blog

      மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

      அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

      தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!