மாநிறமா இருக்கீங்களா?... உங்க கலருக்கு என்னென்ன கலர் நெயில் பாலிஷ் பொருத்தமாக இருக்கும்...
- Get link
- X
- Other Apps
சரும நிறத்துக்கு ஏற்ற நெயில் பாலிஷ் என்ன என்பதை கண்டறிவது பலருக்கும் கடினமான விஷயமாக இருக்கும். நீங்களும் அப்படிப்பட்ட ஒருவர் தான் எனில், நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம். பிரவுன் அல்லது டார்க் நிற சருமத்துக்கு ஏற்ற நெயில் பாலிஷ் எது என்று எப்படி கண்டறிவது என்று தெரிந்து கொள்வோம் வாங்க.
பெண்களின் அழகு சாதனப் பொருட்களில் ஒன்றான நெயில் பாலிஷை விரும்பாத பெண்களே இருக்க மாட்டார்கள். நகங்களை அழகாக்கவும், பாதுகாக்கவும் உதவும் விஷயம் தான் நெயில் பாலிஷ் போட்டுக் கொள்வது. சில சமயம் உங்களின் சருமத்துக்கான சரியான நெயில் பாலிஷைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். நீங்கள் ஆன்லைனில் பார்த்து ஆசைப்பட்டு நெயில் பாலிஷை வாங்கியிருப்பீர்கள். அதனை உங்களின் கையில் போடும் போது, அது வேறு மாதிரி நிறத்தில் தோன்றும். இது ஏனெனில், அனைத்து நிறங்களும், எல்லா சரும நிறத்துக்கும் பொருத்தமாக இருக்காது. நீங்கள் கண்ணால் பார்க்கும் போது அழகாகத் தோன்றும் நெயில் பாலிஷ், உங்களின் விரலில் போட்ட பின்பு உங்களுக்கு பொருத்தமானதாகத் தோன்றாது.
பர்கண்டி கலர்
கருமையான அல்லது பிரவுன் நிற சருமத்தை உடையவர்கள் பர்கண்டி கலர் எனப்படும் அடர் சிவப்பு நிற நெயில் பாலிஷை பயன்படுத்தலாம். இது உங்களின் அழகை நன்றாக எடுத்துக் காட்டச் செய்யும். பிரவுன் நிற ஸ்கின் டோன் உள்ளவர்களுக்கு இந்த பர்கண்டி நிற நெயில் பாலிஷ் கவர்ச்சியான தோற்றத்தைக் கொடுக்க உதவும். நீங்கள் ஏதேனும் இரவு நேர பார்ட்டி அல்லது பங்ஷனில் கலந்து கொள்ள நினைக்கிறீர் எனில், அதற்கு பர்கண்டி கலர் நெயில் பாலிஷை நீங்கள் தேர்ந்தெடுத்துப் பாருங்கள். பர்கண்டி கலர் பிரவுன் நிற ஸ்கின் டோன் உள்ளவர்களுக்கு அழகாக இருப்பதோடு, அதிக நம்பிக்கையையும் உங்களுகுக் கொடுக்கும்.
கிளாசிக் ரெட்
பெரும்பாலும் அதிக பெண்களின் விருப்பமான நெயில் பாலிஷ் கலர் எது என்றால் அது சிவப்பு நிறம் தான். அதிலும், பிரவுன் நிற ஸ்கின் டோன் கொண்டவர்களுக்கு மிகவும் இயல்பாக பொருந்தக்கூடிய நெயில் பாலிஷ் இந்த கிளாசிக் ரெட் நிறம் தான். சிவப்பு நிற நெயில் பாலிஷ் எப்போதும் உங்களை நேர்த்தியாகக் காட்டும். கிளாசிக் ரெட் நெயில் பாலிஷில் இருந்து கிளாசிக் ரெட் லிப்ஸ்டிக் வரை அனைத்தும் உங்களை அழகாக காட்டுவதோடு மட்டுமின்றி, ஒரு ஆளுமைத்திறனையும், ராயல்டியையும் கொடுக்கும். அதனால் தான் பலர் திருமணம் போன்ற பெரும்பாலான நிகழ்வுகளில் சிவப்பு நிற ஆடைகளை அணிகின்றனர்.
பீச் (ஆரஞ்சு கலந்த ரோஸ் நிறம்)
ஆரஞ்சு மற்றும் ரோஸ் நிறம் கலந்த பீச் நிறம் மென்மையான அழகைக் கொடுக்கும். பீச் நிற நெயில் பாலிஷை போடுவதன் மூலம் நகங்கள் புத்துணர்ச்சி பெற்றதைப் போன்ற உணர்வை நீங்கள் பெறலாம். பீச் நிற நெயில் பாலிஷ் மட்டுமின்றி, பீச் நிற ஆடை அல்லது அணிகலன்களை பயன்படுத்துவது பிரவுன் நிற ஸ்கின் டோன் உள்ளவர்களை இளவரசியைப் போல் உணரச் செய்யும். பீச் நிறத்தில் பல்வேறு வகையான பீச் நிறங்கள் உள்ளன. எனவே, உங்களுக்கு ஏற்ற பீச் நிறத்தை தேர்ந்தெடுத்துக் கொள்வது நல்லது.
எர்தி டோன் நெயில் பாலிஷ்
எர்தி டோன் நெயில் பாலிஷ் மற்றவர்களின் கவனத்தை உங்களின் பக்கம் ஈர்க்கும். அதிலும், பிரவுன் ஸ்கின் டோன் உள்ளவர்களுக்கு சரியான நெயில் பாலிஷ் எர்தி டோன் நெயில் பாலிஷ் தான். நண்பர்களுடன் வெளியில் செல்லவோ, பார்ட்டி போன்றவற்றுக்கோ செல்ல இது போன்ற எர்தி டோன் நெயில் பாலிஷ்களையே பயன்படுத்துங்கள். அதிலும், பிரவுன் ஸ்கின் டோன் உள்ளவர்களுக்கு இந்த எர்தி டோன் நெயில் பாலிஷ் அதிக அழகு சேர்க்கும்.
ALSO READ : வியர்வை நாற்றத்தைப் போக்க இதை செய்தா போதும்...
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment