Healthy Drink: உடலுக்கு குளுமை தருவது பீரா? மோரா?
- Get link
- X
- Other Apps
பீர், மோர் இரண்டுமே ஆரோக்கியத்திற்கு சிறந்த பானங்கள். இரண்டுமே புளிக்க வைத்து உருவாக்கப்படுபவை என்றாலும், இரண்டில் எது நல்லது?
மனிதர்களுக்கு அருமையான நற்பயன்களை வழங்கும் மோர் பல்வேறு நோய்களைக் குணப்படுத்த உதவுகிறது. பீர், பார்லி, கோதுமை, சோளம், அரிசி உள்ளிட்ட தானியங்களிலிருந்து பெறப்பட்ட மாவுப் பொருளை நொதிக்கச் செய்து தயாரிக்கப்படுகிறது.
பீர், மோர் இரண்டுமே நொதித்தல் முறையால் உருவாக்கப்படுபவை, உடலுக்கு குளிர்ச்சி தருபவை. ஆனால், மோரா? பீரா? என்றால் இரண்டும் என்று சொல்லக்கூடாது. இரண்டையும் ஒரே நாளில் சாப்பிடுவது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும்.
கால்சியம் சத்தை கொண்டுள்ள மோர் வயிற்றில் ஏற்படும் எரிச்சல், நீரிழப்பு ஆகியவற்றைச் சரிசெய்யும். உடலில் உள்ள தேவையற்ற நச்சுகளை வெளியேற்றும்.
பீர் குடித்தால் ஆரோக்கியக் குறைவு ஏற்படாது உடலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது என்பதனால் தான், இந்தியாவில் சுமார் 30% மக்கள் பீர் சாப்பிடுகிறார்கள். பிற மது பானங்களைவிட பீர் அதிக அளவில் அருந்தப்படுகிறது.
பீர் பானத்தில் ஆல்கஹால் அளவு குறைவாக இருந்தாலும், அதுவும் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு ஏற்படுத்துகிறது.செரிமானத்தை எளிதாக்கும் மோர், கொழுப்பைக் குறைக்கிறது. வாய்ப்புண், வயிற்றுப்புண் என உடலின் உள்ளுறுப்புகளில் ஏற்படும் புண்களையும் சரிசெய்யும். மூலநோயைக் குணப்படுத்த உதவும்.
பீர் அதிகமாக குடிக்கும் ஆண்களுக்கு பாலியல் ஹார்மோன்கள் பாதிப்பும் ஏற்படும். ஆனால், மோர் குடிக்கும் ஆண்களுக்கு பாலியல் ஹார்மோன்கள் பாதிப்பு சரியாகிறது.
பீர் (Beer) உலகின் பழமைவாய்ந்த பானமாக இருந்தாலும், அது மது வகைகளில் ஒன்றாக இருக்கிறது. மிக அதிகமாக பீர் அருந்தும் ஆண்களுக்கு, தந்தையாகும் வாய்ப்பு 50 சதவீதம் குறைவதாக அண்மை ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது.
எனவே, உடல் சூட்டை குறைக்க தேவையானது பீரா? மோரா? என்ற பட்டிமன்றத்தில் வெற்றிப் பெறுவது மோர் தான்...
ALSO READ : Pineapple: அழகுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் அற்புதமான அன்னாசிப் பழத்தின் அழகு டிப்ஸ்..........
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment