நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அறிவியல் உலகில் தடம் பதித்த பெண்கள்......

 நோபல் பரிசு வென்றது முதல் நாசாவிற்கு செல்வது வரையிலும் பெண்கள் வரலாற்றில் தங்களது பெயர்களை இடம்பெற செய்துள்ளனர்.


றிவியலில் எட்ட சாத்தியமில்லாததாக கருதப்பட்ட உச்சத்தையும் பெண்கள் எட்டியுள்ளனர். நோபல் பரிசு வென்றது முதல் நாசாவிற்கு செல்வது வரையிலும் பெண்கள் வரலாற்றில் தங்களது பெயர்களை இடம்பெற செய்துள்ளனர். அந்த வகையில் அறிவியலில் உலகின் தலைசிறந்த ஏழு பெண் கண்டுபிடிப்பாளர்களை பற்றி பார்ப்போம்.



மேரி கியூரி

 

  கதிரியக்கம் தொடர்பான மேரி கியூரியின் கண்டுபிடிப்புகள் அவரை சர்வதேச அளவில் பிரபலமாக்கியது. இயற்பியல் மற்றும் வேதியியல் என இருவேறு துறைகளுக்கான நோபல் பரிசை பெற்ற முதல் விஞ்ஞானி மேரி கியூரி.

பெக்கி விட்சன்

பெக்கி விட்சன் உயர்நிலைப்பள்ளியின் இறுதி ஆண்டில் படித்து கொண்டிருந்த போது நாசா அதன் முதல் பெண் விண்வெளி வீராங்கனைகளை தேர்ந்தெடுத்தது. நிலவில் தரையிறங்கும் அவருடைய கனவு நனவானது. பெக்கி விட்சனும் ஒரு விண்வெளி வீராங்கனை.

மேரி தர்ப்

1953-ல் அட்லாண்டிக் கடலின் அடித்தளத்தின் வரைபடத்தை உருவாக்கிய முதல் பெண் விஞ்ஞானி என்ற பெருமையை பெற்றவர் மேரி தர்ப்.

வாண்டா டயஸ் மெர்சிட்

தரவு புலனுணர்வு நட்சத்திரங்களில் இருந்து வரும் செயற்கைக்கோள் தகவலை மொழிபெயர்த்தது. இது காட்சியை வரைபடங்களுக்கு பதிலாக ஒலி அலைகளாக உருவாக்கும் என கண்டறிந்தார்.

குவாரிஷா அப்துல் கரீம்

எய்ட்ஸ் தடுப்பில் திருப்புமுனை ஏற்படுத்தியவர்

தென்னாப்பிரிக்காவில் எய்ட்ஸ் எப்படி பரவுகிறது மற்றும் பெண்கள் மீது அதன் தாக்கம் எப்படி இருக்கிறது என்று 25 ஆண்டுகளாக ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார். 2013-ம் ஆண்டில் நாட்டின் உயரிய விருது (order of mapungubue) வழங்கியது தொன்னாப்பிரிக்க அரசு.

சோயோன் யீ

2008-ம் ஆண்டில் தென் கொரியாவின் முதல் விண்வெளி வீராங்கனை என்ற பெருமையை பெற்றவர். இதற்கான கடுமையான போட்டியில் சோயோன் 36000 போட்டியாளர்களுடன் போட்டியிட்டு முதலிடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜா செர்காவ் எல் மோர்ஸ்லி

ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிப்பில் முக்கிய பங்களித்தவர்

மேரி கியூரியின் சாதனையால் கவரப்பட்டு அணு இயற்பியலை ஆர்வத்துடன் பயின்றார். ஹிக்ஸ் போஸன் என்பது நிறையுடைய ஓர் அணு துகள் ஆகும். அணுவின் கட்டமைப்புக்கு அடிநிலை தோற்று பொருளாக ஹிக்ஸ் போஸன் இருக்கக்கூடும் எனக் கண்டறிந்தார். இந்த கண்டுபிடிப்பில் பங்களித்ததற்காக ரஜாவுக்கு பல விருதுகள் கிடைத்துள்ளன .மொராக்கோவில் மருத்துவ இயற்பியலில் முதுகலை பட்ட படிப்பை உருவாக்கியதில் ரஜாவின் பங்கு மகத்தானது.



ALSO READ : உறை பனியில் உணவின்றி சிக்கியவர் உயிர் பிழைத்த அதிசயம்........

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்