நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உறை பனியில் உணவின்றி சிக்கியவர் உயிர் பிழைத்த அதிசயம்........

 சாகச நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சி சேனல்களில் மட்டுமே உயிர் பிழைத்திருப்பதற்காக (சர்வைவல்) ஒருவர் மேற்கொள்ளும் தீவிர முயற்சிகளை நாம் பார்த்திருப்போம். இத்தகைய சூழலில் அமெரிக்காவின் வாஷிங்டனில் உறை பனியில் உணவின்றி சிக்கியவர் உயிர் பிழைத்த அதிசயம் நடந்துள்ளது. இந்த சம்பவம் கடந்த நவம்பர் மாதம் நடந்துள்ளது. 

68 வயதான லின்னல் மெக்ஃபார்லேண்ட் (Lynnell McFarland) தனது உறவினருக்கு நினைவஞ்சலி செலுத்திவிட்டு, தனது Mitsubishi காரில் வீடு திரும்பியுள்ளார். அந்த காரை அவர்தான் ஓட்டி வந்துள்ளார். அப்போது அவரது கார் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்திற்குள் தலைக்குப்புற நிலையில் விழுந்துள்ளது. அதனால் கை மற்றும் மூட்டு பகுதிகளில் எலும்பு முறிவு அவருக்கு ஏற்பட்டுள்ளது. உடலை உறைய செய்யும் அந்த பனியில் அவருக்கு உதவ யாரும் இல்லை.  


இருப்பினும் தனது சீட் பெல்டை கழட்டி கொண்டு, அவரால் காரின் பின் பக்கத்தில் வந்து பத்திரமாக இருக்க முடிந்திருக்கிறது. அதே நேரத்தில் அவரால் அவரது செல்போன், தண்ணீர் பாட்டில் என எதையும் எடுக்க முடியவில்லை. எலும்பு முறிவினால் அவர் இருந்த இடத்திலிருந்து நகர முடியாத சூழல். காரில் இருந்த போர்வை மற்றும் துணிகளை கொண்டு தனது உடலை சூட்டுடன் வைத்துக் கொண்டுள்ளார். அவர் ஓய்வு பெற்ற செவிலியர் என்பதால் அதற்கான பயிற்சியை முன்கூட்டியே பெற்றிருந்துள்ளார்.  

அதோடு பனி மழையில் உருகிய சிறு சிறு பனித்துளிகளை தனக்கான உணவாக பருகி, அவர் உயிர்வாழ்ந்து உள்ளதாக சொல்லப்படுகிறது. 

அதே நேரத்தில் அவரது மகள், அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தனது தாயார் குறித்து தேட ஆரம்பித்துள்ளார். சுமார் ஐந்து நாட்களுக்கு பிறகு விபத்தில் சிக்கியிருந்த அவரை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர். 

ஒருவார கால மருத்துவ சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளார் லின்னல் மெக்ஃபார்லேண்ட். 



ALSO READ : ரேஸ் டிராக்கில் காற்றில் பறந்த கார்! மயிர் கூச்செறியும் கார் பந்தய வீடியோ!



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்