நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

WhatsApp எண்ணை மாற்ற வேண்டுமா? அதுவும் பழைய சாட்களை இழக்காமல்..!

WhatsApp பயனர்கள் தங்கள் பழைய சாட்களை இழக்காமல் புதிய எண்ணை எப்படி மற்றுவது என்பது குறித்து இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
ஒரு WhatsApp பயனர் தனது மொபைல் எண்ணை மாற்றும்போது, ​​அவர்கள் சந்திக்க நேரிடும் மிக பொதுவான பிரச்சனை என்னவென்றால், பழைய எண்ணில் இருந்த பழைய சாட் ஹிஸ்டரிகளை அவர்களால் மீட்டெடுக்க முடியாது.

இதனால் தனிப்பட்ட அல்லது வணிகம் தொடர்பான WhatsApp Chat-களை அவர்கள் இழக்க நேரிடுகிறது.

ஆனால், உங்கள் Android மற்றும் iOS சாதனங்களில் இதுபோன்ற பழைய சாட் டேட்டாக்களை மீட்டெடுக்க வழி இருக்கிறது.

இந்த செயல்முறைக்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) தேவைப்படும் என்பதால், புதிய எண் பயன்பாட்டில் இருக்கும்போது மட்டுமே இந்த அம்சம் செயல்படும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

சரி எப்படி இதனை செய்வது என்பதை பற்றி பின்வருமாறு காண்போம்.

உங்கள் போனில் உள்ள WhatsApp ஆப்பில் Settings-க்கு செல்லவும்.

அதில் உங்கள் 'Account' ஆப்ஷனை திறந்து, Change Number என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

 பின்னர், Next என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

உங்களின் பழைய மற்றும் புதிய மொபைல் எண்களை உள்ளிடவும்.

 பிறகு 'Next' பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

உறுதிப்படுத்தலுக்காக ஒரு புதிய நோட்டிபிகேஷன் இப்போது திரையில் தோன்றும். அதில் நீங்கள் பல விருப்பங்களைத் தேர்ந்தெடுக்கலாம். அதாவது அனைத்து தொடர்புகள் (All Contacts), என்னிடம் உள்ள தொடர்புகள் (My Contacts) மற்றும் தனிப்பயன் (custom) என அங்கம் விருப்பத்தை தேர்வு செய்யலாம்.

இதில் ஏதேனும் ஒன்றை கிளிக் செய்தவுடன் உங்கள் தொடர்புத் தகவல் தானாகவே புதுப்பிக்கப்படும்.
பிறகு ​​Done என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

படிப்படியான செயல்முறை முடிந்ததும், உங்கள் WhatsApp-பை ரீஸ்டார்ட் செய்யும்படி கேட்கப்படும் மற்றும் அதற்கான OTP கேட்கப்படும்.

OTP ஐ உள்ளிட்டதும், உங்கள் கணக்கு திறக்கப்படும் அதில் உங்கள் பழைய சாட்கள் அப்படியே இருக்கும். ஆனால் உங்கள் மொபைல் எண் திறம்பட மாற்றப்பட்டிருக்கும். 



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்