: ‘என்ன கொடுமை சார் இது’; தன்னைத் தானே விழுங்கும் பாம்பு..!!
- Get link
- X
- Other Apps
தற்போது வைரலாகும் வீடியோவில், பாம்பு தன்னை தானே விழுங்குவதை பார்த்து, ஆச்சர்யமும் அதிர்ச்சியும் ஒரு சேர உண்டாவதை தவிர்க்க இயலவில்லை.
இணைய உலகத்தில் பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். இதில் காணும் வீடியோக்களில் உள்ள பல விஷயங்கள் நம்மை, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.
அந்த வகையில் தற்போது வைரலாகும் வீடியோவில், பாம்பு தன்னை தானே விழுங்குவதை பார்த்து, ஆச்சர்யமும் அதிர்ச்சியும் ஒரு சேர உண்டாவதை தவிர்க்க இயலவில்லை. யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ இதுவரை 13 மில்லியன் வ்யூஸ்களை பெற்றுள்ளது. புள்ளிகள் கொண்ட அரசப் பாம்பு ஒன்றை தன்னைத்தானே சாப்பிட முயன்று, அதன் முழு உடலையும் கிட்டத் தட்ட விழுங்கிய நிலையில் அதன் உரிமையாளர் ராப் கிளார்க் வெனிடாக்ஸ் என்பவர், ஒரு தனது சாதுர்யத்தால் பாம்பை காப்பாற்றினார்
வீடியோவில், பாம்பு தனது வாலை பகுதியை வாயில் நுழைத்து தன்னை தானே சாப்பிடுவதையும் அதன் உடலின் பெரும்பகுதி வாய்க்குள் செல்வதையும் வீடியோவில் காணலாம். இருப்பினும், பாம்பின் உரிமையாளர், பாம்புகளுக்கு சானிடைஸர் சுவை பிடிக்காது என்பதால், அதன் தலையில் சானிடைஸரை போட முயற்சிக்கிறார். அந்த நபர் பாம்பின் மீது சானிடைசரைப் போட்ட உடன், அது விழுங்கிய அதன் முழு உடலையும் வெளியே துப்புவதைக் காண முடிந்தது.
பாம்பின் தலைக்கு பதிலாக சானிடைசரை அதன் கண்களில் வைத்த உடன் அதற்கு எரிச்சல் ஏற்பட்டாலும், பாம்புகளின் கண்களைப் பாதுகாக்கும் செதில்கள், கண்கள் பாதிக்கப்படாமல் காப்பாற்றியுள்ளது," என்று அவர் தெளிவுபடுத்தினார்.
வைரல் வீடியோவை இங்கே காணலாம்:
மேலும், பாம்பு நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், சம்பவத்திற்குப் பிறகு உணவு உண்டதாகவும் தெரிவித்தார். “இந்த சம்பவத்தில் இருந்து இந்த பாம்பு விரைவில் குணமடைந்து தற்போது நன்றாக உள்ளது. நான் அவரைக் கழுவினேன், அவர் விரைவில் உணவை சாப்பிட்டார், ”என்று ராப் கூறினார்.
பாம்பு ஏன் தன்னைத்தானே சாப்பிட்டது என்பது குறித்து அந்த நபர் விளக்கமளிக்கையில், “அரச பாம்புகள் மற்ற பாம்புகளை உண்பதால், அவ்வப்போது தன்னை தானே விழுங்கும் மன நிலை அதற்கு ஏற்படுவதாக கூறப்படுகிறது. மன அழுத்தம், பட்டினி அல்லது சூடான தட்பநிலை போன்றவை இதற்கு காரணமாக இருக்கலாம் என சிலர் கருதுகின்றனர். எனினும், இந்த பாம்பு சரியான வெப்பநிலை, ஆரோக்கியமான சூழ்நிலை, ஆரோக்கியமான உணவு ஆகியவற்றுடன் வாழ்வதால் இதற்கான சாத்திய கூறு இல்லை.
பாம்புகளிடம் இது மிகவும் அரிதான மற்றும் அசாதாரணமான நடத்தை என்றும் அந்த நபர் குறிப்பிட்டுள்ளார். “என்னிடம் இந்தப் பாம்பு இருந்த பல வருடங்களாக உள்ளது. இவ்வாறு நடப்பது இதுவே முதல் முறை” என்று அதன உரிமையாளர் ராப் மேலும் கூறினார்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment