நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

புதிய மனைவியை தேடி ரஷியாவுக்கு சென்ற உலகின் உயரமான மனிதர்...!

உலகின் மிகவும் உயரமான மனிதரான சுல்தான் கோசென், புதிய துணையை தேடி ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
39 வயதான சுல்தான் கோசென், தென்கிழக்கு துருக்கிய நகரமான மார்டினில் பிறந்தார். இவர் உலகின் மிக உயரமான மனிதருக்கான கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார்.

மனிதர் அனைவரது வளர்ச்சிக்கு காரணமாக இருப்பது மூளையின் தண்டுவடத்தின் கீழ் அமைந்துள்ள பிட்யூட்டரி சுரப்பி ஆகும். அது அனைவருக்கும் சராசரியான செயல்பாடுகளை மேற்கொள்ளும். ஆனால் சுல்தான் கோசென்னுக்கு பிட்யூட்டரி சுரப்பியின் அசாதாரணமான செயல்பாடு காரணமாக அவர் அசுர வளர்ச்சி பெற்றார். அவர் 8 அடி 3 அங்குலம் (251 செ.மீ.) உயரத்துடன் காணப்படுகிறார்.

இவர் 2013-ல் சிரியப் பெண்ணான மெர்வ் டிபோவை மணந்தார். ஆனால் அவர் அரபு மொழி மட்டும் பேசியதால் இருவருக்கும் இடையே கருத்துக்களை பரிமாறிக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக இந்த ஜோடி சமீபத்தில் விவாகரத்து பெற்றது.

சுல்தான் கோசென் தனது புதிய துணையை தேடி ரஷ்யா தலைநகர் மாஸ்கோவிற்கு பயணம் செய்துள்ளார். இது குறித்து அவர் ரஷ்ய தொலைக்காட்சி பேட்டியில் கூறும்போது, "நான் புதிய காதலியை தேடி இங்கு வந்துள்ளேன். மேலும் ரஷிய பெண்கள் மிகவும் அன்பானவர்களாகவும், மிகவும் அழகானவர்களாகவும் இருப்பதை அறிந்தேன். எனக்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்துகொண்டு மீண்டும் துருக்கிக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறேன். ரஷிய பெண் எனக்கு ஒரு மகனையும், மகளையும் பெற்றுக்கொடுக்க வேண்டும். இதனையே நான் விரும்புகிறேன்". இவ்வாறு சுல்தான் கோசென் கூறினார்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்