நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

"உலகின் வலிமையான சிறுவன்" எனும் பெயர் பெற்றவரின் தற்போதைய நிலை..!

தனது 8 வயதில், "உலகின் வலிமையான சிறுவன்" என்னும் பட்டம் பெற்றார்.
உக்ரைனை சேர்ந்த முன்னாள் இளம் பாடி பில்டரான ரிச்சர்ட் சாண்ட்ராக், 1992 ஆம் ஆண்டு பிறந்தார். தன்னுடைய சிறு வயதிலேயே உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக்கொள்வதில் வல்லவராக திகழ்ந்தார். 

இவர் தன்னுடைய 8 வயதில், வளர்ந்த பாடி பில்டர்களை போலவே வலிமையான உடற்கட்டு, சிக்ஸ் பேக்ஸ் , வலுவான தசை என்று தன்னுடைய உடலை வைத்திருந்தார். ஒரு நாளைக்கு அப்போதே 7 முதல் 8 மணி நேரம் வரை பயிற்சி செய்துள்ளார். பெஞ்ச் பிரஸ் மூலம் 82 கிலோ வரையில் உயர்த்தியுள்ளார். மேலும் ஒரு நாளைக்கு 600 புஷ் அப் எடுக்கும் அளவுக்கு வல்லவராக இருந்துள்ளார். சிறு வயதில் அசாதாரண உடற்கட்டை மெருகேற்றி வந்த இவரது புகழ் ஊரெங்கும் பரவியது. இதனால் அவருக்கு "லிட்டில் ஹெர்குலிஸ்" என்ற "உலகின் வலிமையான சிறுவன்" எனும் பட்டம் பெற்றார்.

பல இளைஞர்களுக்கு முன்மாதிரியாக சிறு வயதிலேயே கானப்பட்ட இவர், இப்போது தன்னுடைய 29-வது வயதில் யாரும் எதிர்பாரா வண்ணம் ஒரு சாதாரண இளைஞரை போலவே வலம் வருகிறார்.இதுகுறித்து அவர் கூறும்போது, 

நான் தற்போது முன்பு போல் உடற்பயிற்சி செய்வதில்லை. ஏனென்றால் அது எனக்கு சலிப்பை தருகிறது. எனது முந்தைய காலங்களை நினைத்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தற்போது ஹாலிவுட்டில் ஸ்டண்ட்மேனாக பணிபுரிகிந்து வருகிறேன். நாசாவின் குவாண்டம் விஞ்ஞானியாக மாற வேண்டும் என்பது எனது கனவாகும். அதற்கு இந்த உடல்வடிவமே போதுமானது. இவ்வாறு அவர் கூறினார். 



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்