நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு நீதிபதியை உருவாக்கியுள்ளது சீனா..!!

 செயற்கை நுண்ணறிவு பொருத்தப்பட்ட உலகின் முதல் நீதிபதியை சீனா உருவாக்கியுள்ளது. இந்த நீதிபதி வாய்மொழி வாதங்களைக் கேட்டு 97 சதவீதம் சரியான தீர்ப்புகளை தருகிறார். 


சூப்பர் கம்ப்யூட்டர்கள் முதல் ரோபோக்கள் வரை உருவக்கியுள்ள சீனா, தற்போது, உலகிலேயே முதல் முறையாக, AI  நீதிபதி அதாவது செயற்கை நுண்ணறிவு கொண்ட நீதிபதியை உருவாக்கியுள்ளது. இந்த நீதிபதி வாய்மொழி வாதங்களைக் கேட்டு 97 சதவீதம் சரியான தீர்ப்புகளை தருவதாக சீனா கூறியுள்ளது. இந்த நீதிபதி, ஷாங்காய் புடாங் மக்கள் வழக்கறிஞரால் தயாரிக்கப்பட்டுள்ளார். தொழில்நுட்பத்தின் உதவியால் வழக்கறிஞர்களின் பணிச்சுமை குறையும் என சீனா நம்புகிறது.

சில வழக்குகளில், இந்த AI நீதிபதி, விசாரணையை கேட்டு, தீர்ப்புகளை வழங்க முடியும் என்று நீதிமன்ற அலுவலகம் கூறியது. இந்த இயந்திரத்தை டெஸ்க்டாப் கணினியில் பயன்படுத்தலாம். இந்த AI நீதிபதி தனது அமைப்பில் உள்ள பில்லியன் கணக்கான தரவுகளை பகுப்பாய்வு செய்கிறார். உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான வழக்குகளைப் பயன்படுத்தி இந்த செயற்கை நுண்ணறிவு நீதிபதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் 2015 முதல் 2020 வரையிலானவை.

இப்போதைக்கு இந்த நீதிபதிக்கு ஆபத்தான ஓட்டுநர்கள், கிரெடிட் கார்டு மோசடி மற்றும் திருட்டு வழக்குகள் போன்றவற்றை தீர்க்கும் திறன் உள்ளது. ஆனால் சீன மக்களிடம் இதற்கு வரவேற்பு இல்லை. ஒரு வழக்கறிஞர், "தொழில்நுட்ப ரீதியாக, 97 சதவீத துல்லியமாக  தீர்ப்பு வழங்கலாம், ஆனால் எப்போதும் பிழை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது" என கூறுவதோடு,  தவறு நடந்தால் அதற்கு யார் பொறுப்பு? வழக்கறிஞர், இயந்திரம் அல்லது அல்காரிதம் வடிவமைப்பாளர் என யார் ஒறுப்பேற்பார்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர்

"AI என்னும் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன், தவறைக் கண்டறிய முடியும், ஆனால் முடிவெடுப்பதில் மனிதர்களின் இடத்தை அதனால் எடுத்துக் கொள்ள முடியாது," என்று வழக்கறிஞர் ஒருவர் கூறினார்.  AI துறையில்  சீனா மற்றும் ரஷ்யா காரணமாக அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக பிரித்தானிய உளவு நிறுவனம் எச்சரித்துள்ள நிலையில், AI துறையில் சீனா இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. 


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்