நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பிரதமர் மோடி பயன்படுத்தும் புதிய கார்! என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளது தெரியுமா?

இந்திய பிரதமர் மோடி சுற்றுப்பயணங்களின் போது அவருக்கு பாதுகாப்பு நிறைந்த நவீன கார்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய கார் வாங்கப்பட்டுள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சமீபத்தில் இந்தியாவிற்கு வந்திருந்த போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஹைதராபாத்திற்கு மேபெக் எஸ் 650 காரில் வந்திறங்கினார். சமீபகாலமாக பிரதமரின் பாதுகாப்பு கான்வாயில் மேபேக் கார் இடம் பெற்றுள்ளது

மெர்சடிஸ் நிறுவனத்தின் மேபேக் எஸ் 650 வகை கார் அதிநவீனப் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்தது. விஆர்10 பாதுகாப்பு அம்சம் நிறைந்த இந்த காரின் விலை 10 கோடியாகஇருந்த நிலையில், இது தற்போது12 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்த கார் நிற்கும் இடத்தில் இருந்து மீற்றர் சுற்றளவில் சுமார் 15 கிலோ எடையுள்ள வெடிகுண்டு வெடித்தாலும் காருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதாம். காரின் கண்ணாடிகள் துப்பாக்கி குண்டு துளைக்க முடியாத அளவுக்கு வலிமை கொண்டது.

மேலும் காரின் உள்ளே பாலிகார்பனேட் பூச்சுபூசப்பட்டு உள்ளது. ஏ.கே.47 ரக துப்பாக்கி கொண்டு சுட்டாலும் காருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பது தெரியவந்துள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமராக மோடி பொறுப்பேற்றபோது அவர் பி.எம்.டபிள்யூ 7 சீரிஸ் ரக கார்களையே பயன் படுத்தினார். அதன்பிறகு லேன்ட் ரோவர் ரக கார்களில் பயணம் செய்தார்.

பின்னர் டொயோட்டா லேன்ட் குருசர்ரக கார்களை பயன்படுத்தினார். இப்போது மெர்சிடிஸ் மெபெக் எஸ் 650 ரக கார்களுக்கு மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!