நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஒரே வாரத்தில் 3 கிலோ வரை உடல் எடையை குறைக்க வேண்டுமா? அப்போ இந்த பழத்தை தினமும் சாப்பிடுங்க

கொய்யா பழத்தில் நார்ச்சத்து அதிகமாகவே உள்ளது. இதனால் செரிமானத்தை தாமதப்படுத்தி பசி உணர்வை தாமதமாக்கும். இதனால் நீங்கள் எந்த உணவையும் தேடி சாப்பிடமாட்டீர்கள். குறிப்பாக டயட் இருப்போருக்கு இந்த பழம் மிக உதவியாக இருக்கும்.
இதனால் நீங்கள் பயமின்றி கொய்யாவை தினமும் டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம். மேலும், கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடல் எடை குறையுமா என்பது குறித்து பார்க்கலாம்..

கொய்யா பழம் குறைந்த கலோரிகளை கொண்டது. ஆனால் அதிக ஆற்றல் தரக்கூடிய பழம். டயட்டின் போது விரைவில் சோர்வாகவும், களைப்பாகவும் இருப்பீர்கள். அவர்களுக்கு கொய்யா நல்ல பலன் தரும். நாள் முழுவதும் எனர்ஜியாகவே இருப்பீர்கள்.

கொய்யாவில் நார்ச்சத்து மட்டுமன்றி புரோட்டீன் , வைட்டமின்கள், மினரல்களும் நிறைவாக இருப்பதால் வளர்ச்சிதை மாற்றத்தை சீராக்கவும் உதவும். உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தும் குறைவின்றி கிடைக்கும்.

கொய்யா ஹார்மோன் சமநிலையின்மையை போக்க உதவும் சிறந்த பழம், நீரிழிவு நோயாளிகள், உடல் எடையை குறைக்க முயற்சிப்போர் தாராளமாக சாப்பிடலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றது. இதனால் நாம் சாப்பிடும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை வேகமாக உறிஞ்சும் ஆற்றலை அளிக்க உதவுகிறது.

மேலும் இதில் உள்ள நார்ச்சத்து செரிமானமின்மை காரணமாக பிரச்சனைகளை சந்திப்பவர்களுக்கு கொய்யா சிறந்த நண்பன். எனவே தினமும் ஒரு ஒரு கொய்யப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு பல ஆரோக்கியங்களை தருகின்றது.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!