நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

விண்வெளியில் முடி வெட்டுவது எப்படி சாத்தியம்..?

 விண்வெளியில் அவர்கள் வெட்டக்கூடிய ஒவ்வொரு முடியும் பறந்து கொண்டிருக்குமே தவிர கீழே விழாது.


விண்வெளியில் இருக்கும் சர்வதேச விண்வெளி மையமானது, உலகம் முழுதும் உள்ள விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட வேலைகளை மேற்கொள்ளும் இடமாக உள்ளது.

விண்வெளியில் பூமியில் இருப்பதை போன்றே தலைமுடியை வாருவதற்கு, கழிவறையை பயன்படுத்துவதற்கு மற்றும் தலைமுடியை வெட்டுதல் உள்ளிட்ட மேலும் இதுபோன்ற அன்றாட நடவடிக்கைகளுக்கென பிரத்யேகமாக சாதனங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

விண்வெளியில் பூமியை போன்று தலைமுடியை அவ்வளவு எளிதில்  வெட்ட முடியாது.அங்கு புவியீர்ப்பு விசை என்பது சுத்தமாக இருக்காது.

இந்த நிலையில், சமீபத்தில் விண்வெளி வீரர் ஒருவர் தான் எவ்வாறு முடி வெட்டுகிறேன் என்பதை வீடியோ மூலம் வெளியிட்டுள்ளார்.மத்தியாஸ் மாவ்ரெர் என்ற அந்த விண்வெளி வீரர் இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி வீரர் ராஜா சாரி என்பவர், மத்தியாஸின் முடியை வெட்டிக் கொண்டிருக்கிறார்.

விண்வெளியில் அவர்கள் வெட்டக்கூடிய ஒவ்வொரு முடியும் பறந்து கொண்டிருக்குமே தவிர கீழே விழாது. அவற்றை பத்திரமாக எடுத்து குப்பையில் வீச வேண்டும். இந்த சிக்கலை சமாளிப்பதற்கென விண்வெளியில் பூமியை போன்றே சிறப்பு இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள முடிவெட்டும் ட்ரிம்மர், முடியை வெட்டியவுடன் அந்த முடியை வேக்யூம் கிளீனரை பயன்படுத்தி அதனுள் சேமித்து வைத்துக் கொள்ளும்.

இந்த விண்வெளி வீரர்கள் அனைவரும் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தில் சமீபத்தில் விண்வெளி மையத்தை சென்றடைந்தனர். அவர்கள் அடுத்த 6 மாதங்களுக்கு அங்கு தங்கியிருப்பார்கள்.

‘காஸ்மிக் கிஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விண்வெளி திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு சென்றுள்ள மத்தியாஸ்க்கு இது முதல் விண்வெளி அனுபவம் ஆகும்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்