முதலையை ஓரங்கட்டி வெற்றி பெறும் ஆமை வீடியோ வைரல்!
- Get link
- X
- Other Apps
கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது என்ற பழமொழியை மட்டுமல்ல, முயல்-ஆமை கதையையும் நிரூபிக்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகிறது.
சமூக ஊடகக்களில் பல்வேறு வீடியோக்கள் வைரலானாலும், விலங்குகளின் சுட்டித்தனங்களும், கொடூரமும் அதிக அளவில் வியப்புடன் பார்க்கப்படுகின்றன.
விலங்குகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன. விலங்குகள் தொடர்பான வீடியோக்களை மக்கள் விரும்புகிறார்கள். ஒரு சிறிய விலங்கு தன்னை விட பெரிய மற்றும் பயங்கரமான விலங்குகளை மிஞ்சும்போது மக்களுக்கு மிகவும் பிடிக்கிறது. மக்கள் அத்தகைய வீடியோக்களை மிகுந்த ஆர்வத்துடன் பார்க்கிறார்கள்.
இன்ஸ்டாகிராமில் தற்போது அப்படி ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அண்மையில் வெளியாகிய வீடியோ ஒன்றில், அச்சமடைந்த முதலை சிறிய ஆமைக்கு முன்னால் ஒன்றும் செய்ய முடியாமல் தவிப்பதை பார்க்க முடிகிறது.
கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது என்ற பழமொழியை மட்டுமல்ல, முயல்-ஆமை கதையையும் நிரூபிக்கும் இந்த வீடியோவில், முதலையின் வாயிலிருந்து உணவைப் பறிக்கும் காட்சி பார்ப்பவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
குளத்தின் கரையில் ஒரு பெரிய முதலை இருப்பதை இந்த வீடியோவில் காணலாம். கவனமாகப் பார்க்கையில், அங்கு, முதலைக்கு அருகில் ஒரு சிறிய விலங்கும் இருப்பது தெரிகிறது.
உணவு துண்டு முதலையை நோக்கி வீசப்படுகிறது. உணவுத் துண்டு விழுந்தவுடனே, ஆமை அதிவேகமாக அங்கு வந்து, முதலையின் வாயில் இருந்து மிகவும் புத்திசாலித்தனமாக உணவை லபக் என்று எடுத்துச் செல்கிறது.
வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்தால் நம்பவே கடினமாக இருக்கும். இந்த வீடியோவில் (Viral Video), ஒரு சிறிய ஆமை ஒரு பயங்கரமான முதலையை புத்திசாலித்தனமாக தோற்கடித்து, அதன் உணவை வாயில் இருந்து பறிக்கிறது. அதே சமயம், உருவத்தில் பெரிதாக உள்ள முதலை, சிறிய ஆமை செய்வதைப் பார்த்து ஒன்றும் செய்ய முடியாமல் அமைதியாக இருக்கிறது.
ஆமையைப் புகழும் மக்கள்
இன்ஸ்டாகிராமில் planetearth.explorer என்ற கணக்கில் இருந்து இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. 'உங்களைப் பற்றி யாரும் உடனடியாக ஒரு கருத்தை உருவாக்க அனுமதிக்காதீர்கள்' என்று அந்த இன்ஸ்டா பயனர் வீடியோவுடன் எழுதியிருக்கிறார்.
இந்த வீடியோவைப் பார்க்கும் பலரும், ஆமையைப் பாராட்டுகிறார்கள். பல பயனர்கள் கருத்துகளில் ஆமை சக்தி என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வீடியோ இதுவரை சுமார் ஒரு லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது.
ALSO READ : ரேஸ் டிராக்கில் காற்றில் பறந்த கார்! மயிர் கூச்செறியும் கார் பந்தய வீடியோ!
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment