நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Food: 2021ல் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு பிரியாணி! நிமிடத்திற்கு 115 ப்ளேட்........

 2021 ஆம் ஆண்டில் இந்தியர்கள் அதிகமாக வாங்கிய உணவு பிரியாணி! நிமிடத்திற்கு 115 பிளேட் பிரியாணியை இந்தியர்கள் ஆர்டர் செய்துள்ளனர்


  • இந்தியர்கள் அதிகம் விரும்பும் உணவு பிரியாணி
  • அதிக விருப்பத்தை பெற்றது சமோசா
  • குலோப் ஜாமூனை அதிகம் விரும்பும் இந்தியர்கள்



பிரியாணி அனைவருக்கும் பிரியமானது என்றாலும், அதை நிரூபிக்கும் அறிக்கி ஆச்சரியத்தை அளிக்கிறது. 2021 ஆம் ஆண்டில் இந்தியர்கள் நிமிடத்திற்கு 115 ப்ளேட் பிரியாணியை ஆர்டர் செய்ததாக ஆன்லைன் உணவு விநியோக தளமான ஸ்விக்கி தெரிவித்துள்ளது.

பிரியாணி மீதான காதல் இந்தியாவில் அதிகரித்து வருவதை இந்த அறிக்கை உறுதி செய்கிறது. பிரியாணி, சிக்கன் விங்ஸ், குலாப் ஜாமூன், சமோசா என பலவிதமான உணவுகள் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட பட்டியலில் இடம் பிடித்தாலும், அதில் முதலிடம் பிடித்தது பிரியாணியே என்று ஸ்டேட் ஈடிஸ்டிக்ஸ் (StatEATstics) அறிக்கை கூறுகிறது.

4.25 லட்சத்திற்கும் அதிகமான புதிய பயனர்கள் சிக்கன் பிரியாணியை ஆர்டர் செய்ததாகவும் ஸ்விக்கி கூறுகிறது. 5 மில்லியன் ஆர்டர்கள் பெற்ற சமோசா தான் இந்த வருடத்தில் அதிகம் சாப்பிடப்பட்ட தின்பண்டம் என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.  

“இந்தியர்கள் நிமிடத்திற்கு 115 ப்ளேட் பிரியாணி, நியூசிலாந்தின் மக்கள்தொகைக்கு சமமான 5 மில்லியன் சமோசாக்கள் ஆர்டர் செய்துள்ளனர்” என்று Swiggy இன் ஆறாவது ஆண்டு StatEATstics அறிக்கை தெரிவிக்கிறது.  

"2020 ஆம் ஆண்டில், நிமிடத்திற்கு 90 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டன, இது 2021 இல் 115 ஆக உயர்ந்துள்ளது, இது வினாடிக்கு 1.91 ஆக உள்ளது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சிக்கன் விங்ஸை விட சமோசா ஆறு மடங்கு அதிகமாக ஆர்டர் செய்யப்பட்டாலும், பாவ் பாஜி 2.1 மில்லியன் ஆர்டர்களுடன் இந்தியாவின் இரண்டாவது விருப்பமான சிற்றுண்டியாக இருந்தது.

மொத்தம் 2.1 மில்லியன் ஆர்டர்களுடன், ஸ்விக்கியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட இனிப்பு குலாப் ஜாமூன். அதைத் தொடர்ந்து 1.27 மில்லியன் ஆர்டர்களுடன் ரசமலாய் இடம் பிடித்துள்ளது.  

Swiggy இல் ஆரோக்கியமான உணவுக்கான தேடல் 2021 இல் இரட்டிப்பாகியது, மேலும் Swiggy HealthHub இல் உள்ள ஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட உணவகங்கள் ஆர்டர்களில் 200 சதவீதம் அதிகரித்துள்ளன. பெங்களூரு மிகவும் சுகாதார உணர்வுள்ள நகரமாக உருவெடுத்துள்ளது, அதைத் தொடர்ந்து ஹைதராபாத் மற்றும் மும்பை அந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

Instamart 2021 இல் மட்டும் 28 மில்லியன் பழங்கள் மற்றும் காய்கறிகள் வாங்கப்பட்டுள்ளன. தக்காளி, வாழைப்பழங்கள், வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் பச்சை மிளகாய் ஆகியவை அதிகமாக வாங்கப்பட்ட முதல் ஐந்து பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகும்.

இன்ஸ்டாமார்ட்டில் ஆர்டர் செய்யப்பட்ட மொத்த வாழைப்பழங்கள் சுதந்திர தேவி சிலையை விட 2.6 மடங்கு அதிகமாகும்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!