நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சைக்கிள் ஓட்டி இணையத்தை கலக்கும் பச்சைக்கிளி: வைரலான வீடியோ.....

 குழந்தைகளுக்கு சைக்கிள் ஓட்டுவதில் உள்ள மோகம் அனைவருக்கும் தெரியும். ஆனால், விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் கூட சைக்கிள் ஓட்டும் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 


 இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில்  பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் (Viral Video) ஆகின்றன.  சமீப காலங்களில் விலங்குகள் மற்றும் பறவைகளின் வீடியோக்கள் இணையத்தில் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போது ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.  

குழந்தைகளுக்கு சைக்கிள் ஓட்டுவதில் உள்ள மோகம் அனைவருக்கும் தெரியும். ஆனால், விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் கூட சைக்கிள் ஓட்டும் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் கிளி ஒன்று சைக்கிள் ஓட்டுவது போன்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. இதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால், இந்த சைக்கிள் மிகவும் சிறியதாக உள்ளது. கிளிக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது போல, அந்த கிளிக்கு இந்த சைக்கிள் கச்சிதமாக உள்ளது. 

கிளி சைக்கிள் ஓட்டும் இந்த வீடியோவைப் பார்ப்பவர்களால் தங்கள் கண்களையே நம்ப முடியவில்லை. 

பொதுவாக கிளிகள் மனிதர்கள் செய்வதை அப்படியே செய்யும் பழக்கம் கொண்டவை என்பதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த வீடியோ அதற்கு சரியான ஒரு சான்றாக அமைந்துள்ளது. 

சைக்கிள் ஓட்டும் கிளி 

கிளியின் இந்த கியூட் வீடியோ cutepetswild என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. வீடியோவைப் பார்ப்பவர்கள் அனைவரின் முகத்திலும் சிரிப்பு வருவது உறுதி. 

இந்த வீடியோவில் கிளி ஒன்று சிறிய சைக்கிள் ஒன்றின் அருகே வந்து அதை ஓட்டிச் செல்வதைக் காண முடிகின்றது. அதுமட்டுமில்லாமல் சைக்கிள் கைப்பிடியை அந்த கிளி கழுத்தால் கட்டுப்படுத்துவதையும் வீடியோவில் காண முடிகின்றது. 

கிளியின் இந்த சைக்கிள் ஓட்டும் திறமை பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இந்த கிளிக்கு இதற்கான பயிற்சி அளிக்கப்பட்டிருக்குமோ என சில இணையவாசிகளுக்கு தோன்றுவது அவர்களது கமெண்டுகளின் மூலம் தெரிகிறது. 

கியூட்டான அந்த கிளியின் வீடியோவை இங்கே காணலாம்:

கிளியின் செயலால் மயங்கிய நெட்டிசன்கள் 

கிளியின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ அதிக அளவில் லைக் செய்யப்படுகிறது. இதுவரை ஆயிரக்கணக்கானோர் கிளியின் இந்த கியூட்டான வீடியோவை லைக் செய்துள்ளனர். இந்த வீடியோவுக்கு பலர் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். 

வீடியோவைப் பார்த்து மகிழ்ந்த ஒரு பயனர், “இது மிக அழகாக உள்ளது” என எழுதியுள்ளார். மற்றொரு பயனர், “ நம்ப முடியவில்லை, சபாஷ்” என வியந்துள்ளார்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்