தினமும் 2 வாழைப்பழம் சாப்பிடும் பெண்களுக்கு உடலில் என்னென்ன மாற்றங்கள் உண்டாகும்...........
- Get link
- X
- Other Apps
தினசரி வாழைப்பழங்களை சாப்பிட்டு வந்தால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை பெற முடியும்.
வாழைப்பழம் மிகவும் நன்மைகளை அளிக்கக் கூடிய ஒரு பழமாகும். வாழைப்பழம் சாப்பிட்டு வருவது உங்க உடம்பிற்கு தேவையான ஆற்றலை கொடுக்கக் கூடியது. வாழைப்பழத்தில் பொட்டாசியம், விட்டமின் பி6, விட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் பைட்டோ நியூட்ரியன்ட்கள் போன்ற சத்துக்கள் உள்ளது. பெண்கள் தினசரி வாழைப்பழங்களை சாப்பிட்டு வருவது மலம் கழிப்பதை எளிதாக்குகிறது. வாழைப்பழம் சாப்பிடுவது ஏன் ஆரோக்கியத்திற்கு நல்லது தெரியுமா? இங்கே விரிவாக அறிவோம்.
வாழைப்பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன மற்றும் இயற்கையாகவே சுக்ரோஸ் மற்றும் பிரக்டோஸ் உள்ளன. எனவே பெண்கள் இதை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
வாழைப் பழத்தில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் உடலுக்கு அதிக ஆற்றலைத் தர உதவுகிறது. காலப்போக்கில் உடலுக்கு தேவையான ஆற்றலானது மெதுவாக உறிஞ்சப்படும். அதனால் தான் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு வாழைப்பழம் அதிகமாக எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்....
* மலச்சிக்கலுக்கு பயனுள்ளதாக இருக்கும்
* வாழைப்பழத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது மற்றும் சீரான குடல் இயக்கத்திற்கு உதவுகிறது.
* இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது
* வாழைப்பழத்தில் உள்ள சோடியம் இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.
* வாழைப்பழத்தின் மென்மை தன்மையால், சாப்பிட்டவுடன் வயிற்றில் ஏற்படும் எரிச்சலை குறைக்கிறது.
* உடல் வெப்பநிலை கட்டுப்படுத்தப்படுகிறது
* காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் வாழைப்பழத்தை உட்கொள்வது உடல் வெப்பநிலையை சீராக்க உதவுகிறது.
* வாழைப்பழத்தில் உள்ள டிரிப்டோபன் உங்கள் தலையை அமைதிப்படுத்த உதவுகிறது.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment