நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Time capsule: 130 ஆண்டுகள் பழமையான சிலைக்கு அடியில் இருந்து கால இயந்திரம் கண்டுபிடிப்பு.....

 130 ஆண்டுகள் பழமையான சிலைக்கு அடியில் இருந்து டைம் கேப்சூல் கண்டுபிடிப்பு


130 ஆண்டுகள் பழமையான சிலைக்கு அடியில் இருந்த தொன்மையான பொருட்கள் (Time capsule) வெர்ஜீனியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. ரிச்மண்டில் உள்ள ராபர்ட் ஈ. லீ (Robert E. Lee Monument) என்ற ஜெனரலின் 130 ஆண்டுகள் பழமையான சிலைக்கு அடியில் இருந்த டைம் கேப்சூல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன் கண்டுபிடிப்புக்குப் பிறகு, வர்ஜீனியா கவர்னர் ரால்ப் நார்தம் இது குறித்து ட்வீட் செய்தார். "இதுதான் அனைவரும் தேடும் கால இயந்திரமாக இருக்கலாம்," என்று கூறினார்.

1887 ஆம் ஆண்டு செய்தித்தாளில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையின்படி, பல கலைப்பொருட்கள், நினைவுச் சின்னங்கள் மற்றும் ஆபிரகாம் லிங்கனின் அரிய புகைப்படம் மற்றும் நீண்ட காலமாக தேடப்பட்டு வரும் சில பொக்கிஷங்கள் இந்த சிலைக்கு அடியில் வைக்கப்பட்டிருந்தது. 

தற்போது கிடைத்துள்ள பெட்டி, எக்ஸ்ரே மூலம் ஸ்கேன் செய்யப்படுகிறது. அதே சிலையின் அடிப்பகுதியில் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்ட முந்தைய டைம் கேப்ஸ்யூலில் (Time Capsule) மூன்று புத்தகங்கள், ஒரு துணி தண்ணீரில் நனைந்து இருந்து. அதோடு, உறையில் ஒரு புகைப்படம் மற்றும் ஒரு நாணயமும் இருந்தது.

நினைவுச்சின்னத்தின் கட்டுமானத்தை மேற்பார்வையிட்டவர்கள், தகரப் பெட்டி ஒன்றை விட்டு விட்டுச் சென்றுவிட்டார்கள் என்று கூறப்படுகிறது. உள்நாட்டுப் போரின் போது வடக்கு வர்ஜீனியாவின் ராணுவத்திற்கு, கட்டளைத் தலைவராக இருந்தார் ராபர்ட் ஈ. லீ. ரிச்மண்டில் உள்ள ராபர்ட் ஈ சிலை 1890 இல் நிறுவப்பட்டது.

இந்த சிலையை அகற்றுவதற்காக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது. செப்டம்பர் மாதத்தில்தான், வர்ஜீனியாவின் உச்ச நீதிமன்றம், சிலையை அகற்றுவது தொடர்பான தீர்ப்பையும், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வழங்கியது.  

கடந்த ஆண்டு மினசோட்டாவில் வெள்ளையின போலீஸ் அதிகாரியால் கொலை செய்யப்பட்ட கறுப்பினத்தவர் ஜார்ஜ் ஃபிலாய்ட் (George Floyd) இறந்ததைத் தொடர்ந்து இந்த சிலை இன நீதிக்கான போராட்டங்களின் மையமாக மாறியது.


ALSO READ : "உலகின் வலிமையான சிறுவன்" எனும் பெயர் பெற்றவரின் தற்போதைய நிலை..!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!